மோசடி வழக்கில் தாய்க்கு சிறை... பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாரா கவின்...?

கவின் குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Web Desk | news18
Updated: August 30, 2019, 3:52 PM IST
மோசடி வழக்கில் தாய்க்கு சிறை... பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாரா கவின்...?
பிக்பாஸ் வீட்டில் கவின்
Web Desk | news18
Updated: August 30, 2019, 3:52 PM IST
பணமோசடியில் பிக்பாஸ் போட்டியாளர் கவினின் தாய்க்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கவின் போட்டியை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தமயந்தி இவருடைய மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகள் ராணி. இவர்களும் தமயந்தியின் கணவர் அருணகிரி மற்றும் மகன் சொர்ணராஜன் ஆகியோரும் அந்தப் பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் 1998-ம் ஆண்டு முதல் 2006 -ம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளனர்.

இந்த சீட்டு கம்பெனியில் 34 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர். இவர்கள் யாருக்கும் பணத்தை திருப்பி தரவில்லை எனவும் தங்களுடைய பணம் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை தங்களுக்கு பெற்று தர வேண்டும் எனவும் கடந்த 2007 -ம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.


குற்றம் சாட்டப்பட்ட சொர்ணராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இறந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தமயந்தி, ராணி மற்றும் ராஜலட்சுமி ஆகியோருக்கு மோசடி வழக்கில் 5 வருட சிறை தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் சீட்டு நிதியங்கள் சட்டத்தின்படி இரண்டு வருட சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜலட்சுமி, நடிகர் கவினின் தாயார் ஆவார். கவின் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறார்.

கவின் குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ல நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற கவின் நிகழ்ச்சி குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் வெளியேற குழு அனுமதிக்குமா? என்பதை வரும் நாட்களில் தெரிய வரும்..

Loading...

Also see...

First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...