ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மனைவிக்கு வந்த வித்தியாசமான ஆசை.. நிறைவேற்றி அழகு பார்த்த யூடியூப் ராஜ்மோகன்!

மனைவிக்கு வந்த வித்தியாசமான ஆசை.. நிறைவேற்றி அழகு பார்த்த யூடியூப் ராஜ்மோகன்!

கவிதா ராஜ்மோகன்

கவிதா ராஜ்மோகன்

கவிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்தை ஷேர் செய்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தனது மனைவி கவிதாவின் வித்தியாசமான ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார் பேச்சாளர், யூடியூப் பிரபலம் ராஜ்மோகன். இதுக் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  பேச்சாளர், நடிகர், யூடியூப்பர்  என பன்முகங்களை கொண்டவர் ராஜ்மோகன். தற்போது கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் இவரின் நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. அதே போல் இவரது மனைவி கவிதாவும் மீடியா துறையை சார்ந்தவர் தான். இவர்கள் இருவரும் ஜோடியாக விஜய் டிவி மிஸ்டர் அண்ட் மிர்சஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஃபைனல்ஸ் வரை சென்றனர். கவிதா, இன்ஸ்டாவில் படு ஆக்டிவ். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவார்.

  ' isDesktop="true" id="820809" youtubeid="Wz6v1yBWLx0" category="television">

  அந்த வகையில் சமீபத்தில் கவிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்தை ஷேர் செய்தார். பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தனர். இவர்களுக்கு ஏற்கெனவே 2 ஆண் குழந்தைகள் இருப்பதால் பலரும் கவிதா 3வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக  நினைத்தனர். ஆனால் கடைசி நேரத்தில் கவிதாவும் ராஜ்மோகனும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். இதுக் குறித்து தங்களது யூடியூப் பக்கத்தில் இருவரும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.


  அதில்  முதல் 2 குழந்தைகளின் டெலிவரி அனுபவத்தை பகிரும் கவிதா, கடைசியில் நான் 3வது முறையாக கர்ப்பமாக இல்லை இது சும்மா மெட்டர்னிட்டி ஃபோட்டோஷூட்டுக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்கிறார். அதாவது கவிதா நீண்ட நாட்களாக மெட்டர்னிட்டி ஷூட் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு இருக்கிறார். அவர் கர்ப்பமாக இருந்த சமயத்தில் இது ட்ரெண்டிங்கில் இல்லையாம். இப்போது மெட்டர்னிடி ஃபோட்டோஷூட் என்பது படு வைரலாக இருப்பதால் ஆசைக்காக அப்படியொரு ஃபோட்டோஷூட்டை கவிதா நடத்தி இருக்கிறார். ராஜ்மோகனும் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றி வைத்து இருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv