• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியன் ஸ்டோரில் கதிர் - முல்லை ரொமான்ஸ்... கடைசியில என்ன இப்படி ஆயிடுச்சி!

பாண்டியன் ஸ்டோரில் கதிர் - முல்லை ரொமான்ஸ்... கடைசியில என்ன இப்படி ஆயிடுச்சி!

கதிர் முல்லை

கதிர் முல்லை

நீண்ட மாதங்களுக்கு பின்பு இன்றைய எபிசோடில் கதிர்- முல்லை சீன்கள் இடம்பெற்றுள்ளன.

  • Share this:
    நீண்ட இடைவெளிக்கு பிறகு கதிர் - முல்லை ரொமான்ஸ் காட்சிகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இடம்பெற்றுள்ளன.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் - முல்லை ஜோடிக்கு தனியாக ஃபேன்ஸ் பட்டாளமே இருந்தது. ஆரம்பத்தில் குமரன் மற்றும் சித்ரா ஜோடிகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தனர். சித்ராவின் மறைவுக்கு பிறகு அவர் ரோலில் காவ்யா அறிவுமணி நடிக்க தொடங்கினார். அவரின் எண்ட்ரிக்கு பிறகு கதிர் - முல்லை ரொமான்ஸ் காட்சிகள் பெரிதளவில் குறைக்கப்பட்டன. சொல்லப்போனால் முன்பு அவர்களுக்கு கதையில் கொடுக்கப்பட்ட காதல் காட்சிகள் காவ்யா வருகைக்கு பின்னர் பாதியளவில் குறைந்தது. இந்நிலையில் நீண்ட மாதங்களுக்கு பின்பு இன்றைய எபிசோடில் கதிர்- முல்லை சீன்கள் இடம்பெற்றுள்ளன.

    அம்மாவை பார்க்க முடியாமல் வீட்டுக்கு திரும்பி வரும் கண்ணன், வீட்டில் கரண்ட் இல்லாமல் இருப்பதை பார்த்து ஐஸ்வர்யாவிடம் விசாரிக்கிறான். ”நம்ம வீட்டில மட்டும் தான் மாமா கரண்ட் இல்லன்னு” சொன்ன ஐஸ்வர்யா, பார்வதி அம்மா பற்றியும் விசாரிக்கிறார். அண்ணன்கள் தன்னை அம்மாவை பார்க்க அனுமதிக்கவில்லை, அம்மாக்கும் என்னை பார்க்க பிடிக்கவில்லை என நடந்ததை கூறி ஐஸ்வர்யாவிடம் கண்ணன் வருந்துகிறான். பின்பு தன் மீது எல்லோருக்கும் இருக்கும் கோபம் தான் இதற்கெல்லாம் காரணம் என வருந்தியவன், கரண்ட் இல்லாமல் ரொம்ப கஷ்டம் என புரிந்து கொண்டு வீட்டில் தங்க இடம் கொடுத்தவருக்கு ஃபோன் பண்ணி கரண்ட் இல்லாத விஷயத்தை சொல்கிறான். ஆனால் அவர், பதிலுக்கு போன மாச கரண்ட் பில் கட்டலப்பா அதான் கரண்ட் இல்லை. நீங்க கட்டிடூங்கன்னு சொல்லி ஃபோனை ஆஃப் செய்கிறார். காசு இல்லாமல் கலங்கி நிற்கிறான் கண்ணன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த பக்கம் மூர்த்தி வீட்டில், முல்லையும் - கதிரும் பார்வதி அம்மா உடல்நிலை பற்றி பேசி கொண்டிருக்கின்றனர். சாப்பிடாமல் தூங்க போன முல்லையை ஏன் சாப்பிடவில்லை? என்று கதிர் விசாரிக்க அதற்கு பதிலை முல்லை கதிர் மேலே திருப்புகிறார். “நீங்களும் தான் சரியா சாப்பிடவில்லை”ன்னு முல்லை சொல்ல, ஏற்கெனவே குண்டாகி விட்டதாக கதிர் நக்கல் செய்கிறார். உங்க அழகுக்கு ஈடு கொடுக்க வேண்டாமான்னு அப்படியே முல்லை அழகை கதிர் வர்ணிக்க போதும் போதும் என்று  முல்லை தூங்க போகிறார்.

    சாப்பிடாமல் போனதால் முல்லை நடு இரவில் பசியால் எழுந்து தண்ணீரை குடிக்கிறார். இதைப் பார்த்த கதிர், முல்லைக்கு ஏதாவது செஞ்சி கொடுக்கலாம் அப்படின்னு கிச்சனுக்கு போகிறார். கடைசியில் மூர்த்தி தனத்திற்கு முட்டை ஆம்லெட் போட்டு கொடுத்த மாதிரி செய்யலாம்ன்னு நினைச்சி முல்லைக்கு பெரிய சைஸ் ஆம்லெட் போட்டு கொடுக்கிறார். ஆனா கடைசியில கதிராலயே அவர் செஞ்ச ஆம்லெட்ட சாப்பிட முடியல. ஒரே உப்பு.

    ஆனாலும் தனக்காக கணவர் சமச்சி தந்ததை முல்லை அன்போடு சாப்பிடுகிறார். கதிருக்கு காதல் பார்வையால் தேங்க்ஸ் சொல்கிறார். அடுத்த நாள் காலை பொழுது விடிய கண்ணனும் ஐஸ்வர்யாவும் மீண்டும் கரண்ட் பற்றி பேசுகிறார்கள். இன்னிக்கும் கரண்ட் இல்லைனா கஷ்டம் என்பதை புரிந்து கொண்ட கண்ணன் நண்பர்களின் பணம் உதவி கேட்கிறான். உடனே ஐஸ்வர்யா கழுத்தில் இருக்கும் செயினை கழட்டி இதை அடகு கடையில் வைத்து பணம் கொண்டு வரும்படி கூறுகிறார். ஆனால் கண்ணன் அதை வாங்க மறுக்கிறான். இந்த பக்கம் பிரசவத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் தனம் கதிரிடம் அத்தை குறித்து விசாரிக்கிறார். மொத்தத்தில் முல்லை - கதிர் காட்சிகள் தான் இன்றைய எபிசோடின் ஹைலைட்ஸ்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: