• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கதிரை மீறி முல்லை செய்த காரியம்.. ஷாக்கான ஐஸ்வர்யா - கண்ணன்!

கதிரை மீறி முல்லை செய்த காரியம்.. ஷாக்கான ஐஸ்வர்யா - கண்ணன்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் தினம் தினம் புது புது பிரச்சனைகள் வெடிக்கிறது.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் சேட்டை எல்லை மீறி போவதால் கண்ணனும் ஐஸ்வர்யாவும் ஷாக் ஆகி நிற்கிறார்கள்.

    தமிழ் சீரியல்களில் டாப் 3ல் இருக்கும் சீரியல் எதுவென்றால் அது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். விஜய் டிவியில் நாள்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் கண்ணன் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டதில் இருந்தே, பாசமலர்களாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் புகைச்சல்கள் உருவாகத் தொடங்கியது. அம்மா இறந்ததை கண்ணனிடம் சொல்லாத குடும்பத்தினர், அவன் திரும்பி வருவதற்குள் அடக்கம் செய்துவிட்டனர். இதனால் ஒட்டுமொத்த குடும்பத்தினர் மீதே கண்ணன் அதிருப்தியில் இருக்கிறான்.

    இந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் புதிய கடை கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. மூர்த்தின் கோபத்தை சரிசெய்ய எதிர் வீட்டில் குடி வருகிறான் கண்ணன். இந்த நேரம் பார்த்து தனத்திற்கு பிரசவ வலி வர, முதள் ஆளாக ஓடிச் சென்று கண்ணன் உதவுகிறான். தனத்திற்கு குழந்தை பிறந்த பிறகு பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும் என நினைத்த நிலையில் மற்றொரு பிரச்சனை தலை தூக்குகிறது. மீனாவுக்கு தனத்தின் குழந்தையை தான் எல்லோரும் கொஞ்சுவதாக பொறாமை ஏற்படுகிறது. இந்த பக்கம் முல்லைக்கு, கதிருக்கு வீட்டில் பெரியளவில் மதிப்பு இல்லை என வருத்தம் ஏற்படுகிறது. இதனால் வீட்டில் தினம் தினம் புது புது பிரச்சனைகள் வெடிக்கிறது.

    இப்படி இருக்க இன்றைய எபிசோடில், கதிர் கொடுத்த ஏடிஎம் ஐடியாவை மூர்த்தி வேண்டாம் என்று சொன்னதால் முல்லைக்கு வருத்தம் ஏற்படுகிறது. இதனால் வீட்டு வாசலில் உட்கார்ந்து புலம்பி கொண்டிருக்கிறார். முல்லையை கதிர் வந்து சமாதானம் செய்ய அந்த நேரம் பார்த்து ஐஸ்வர்யாவும் கண்னனும் வேலை விட்டு வீட்டுக்கு வருகின்றனர். இருவரும் லேட்டாக வருவதை பார்த்து ஓடி போய் முல்லை டிபன் பாக்ஸில் இட்லி, குழம்பு எடுத்துக் கொண்டு கண்ணன் வீட்டு வாசலில் வைக்கிறாள்.

    கதிர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், முல்லை அவர்களை கூப்பிட கல்லை வீட்டு வாசலில் எறிகிறாள். ஷாக்கான கண்ணனும் ஐஸ்வர்யாவும் ஓடி வந்து பார்க்கின்றனர். முல்லையா இப்படி செய்தது? என இருவருக்கும் ஆச்சரியம். உடனே கதிர் ஜாடை மாடையாக கண்ணனிடம் டிபன் பாக்ஸ் இருப்பதை சொல்ல, இருவரும் முல்லைக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புகிறர்கள். அடுத்த நாள் காலை மீண்டும் முல்லைக்கு குழந்தை ஆசை வருகிறது. இதை கதிரிடம் சொல்ல, அதை மீனாவும் கேட்டுவிடுகிறார். உடனே இருவரையும் கலாய்த்த மீனா, லேட்டாக குழந்தை பெற்றுக் கொள்ளும்படி அட்வைஸ் செய்கிறார். கதிர் அசடு வழிந்தப்படி அங்கிருந்து நகர்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: