பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வரும்படி நடிகை கஸ்தூரியை நெட்டிசன் ஒருவர் அழைக்க, அதற்கு அந்த பொய்யான நிகழ்ச்சிக்குப் பின்னால் ஓடுவதற்கு எனக்கு நேரம் கிடையாது என பதிலளித்திருக்கிறார் கஸ்தூரி.
'பிக் பாஸ் அல்டிமேட்' தமிழ் ரியாலிட்டி ஷோ சில தினங்களுக்கு முன்னர் பிரமாண்டமாக தொடங்கியது. இதில் சுரேஷ் சக்ரவர்த்தி, அபினய், நிருப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, சுருதி, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி ஆகியோர் போட்டியாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.
முதல் சீசன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த
ஓவியா பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்துக் கொள்வார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அவர் கலந்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் நெட்டிடன் ஒருவர் நடிகை கஸ்தூரியிடம், ’ஏன் நீங்கள் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை. வைல்ட் கார்டு எண்ட்ரியில் உள்ளே செல்ல முயற்சி செய்யுங்கள்’ என்று கூறினார்.
விஜய் டிவி நிகழ்ச்சியிலிருந்து விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா... என்ன காரணம்?
அதற்கு பதிலளித்த கஸ்தூரி, ‘எனக்கு குடும்பம் மற்றும் பூர்த்தி செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன. நச்சுத்தன்மைக்கு எப்போதும் நேரமில்லை. பணம் கிடைக்கிறது என்பதற்காக போலியான டிவி நிகழ்ச்சியின் பின்னால் ஓடுவதற்கு நிச்சயமாக நேரமில்லை. உங்கள் திரிக்கப்பட்ட எதிர்பார்ப்புகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்லவும்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.