Home /News /entertainment /

காஷ்மீரில் பிரபல தொலைக்காட்சி நடிகை அம்பிரீன் பட் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை… பதைபதைக்கும் சம்பவம்

காஷ்மீரில் பிரபல தொலைக்காட்சி நடிகை அம்பிரீன் பட் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை… பதைபதைக்கும் சம்பவம்

காஷ்மீர் நடிகை அம்பிரீன் பட்

காஷ்மீர் நடிகை அம்பிரீன் பட்

அம்பிரீன் வீட்டிற்கு வெளியே தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

    காஷ்மீரில் பிரபல தொலைக்காட்சி நடிகை அம்பிரீன் பட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    காஷ்மீரை சேர்ந்தவர் அம்பிரின் பட். பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ள இவர், காஷ்மீர் மக்களால் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். பாடகியாகவும் அம்பிரின் பிரபலம் அடைந்திருந்தார். இந்நிலையில் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் அம்பிரின் பட் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளால் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

    தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அம்பிரீன் பட்டின் உறவினர் ஒருவர் காயம் அடைந்தார். புத்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இதையும் படிங்க - கடல் கன்னி உடையில் மின்னும் நடிகை சன்னி லியோன் - லேட்டஸ்ட் கிளிக்ஸ்

    அம்பிரீன் வீட்டிற்கு வெளியே தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் அவருக்கும் 10 வயதான உறவினர் சிறுவன் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.



    அங்கு சிகிச்சை பலனின்றி அம்பரீன் உயிரிழந்தார். அவரது உறவினர் சிறுவனுக்கு கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதையும் படிங்க - தமிழ் சினிமாவை ஆட்சி செய்த நகைச்சுவை அரசி ’மனோரமா’ பிறந்த நாள்!

    தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்று உடனடியாக கண்டறியப்படவில்லை. தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    பிரபல நடிகை ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது புத்காம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Kashmir

    அடுத்த செய்தி