முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திராவிடம்... கசப்பாய் இருக்குமெனில் - ஜி தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியிலிருந்து விலகும் கரு.பழனியப்பன்

திராவிடம்... கசப்பாய் இருக்குமெனில் - ஜி தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியிலிருந்து விலகும் கரு.பழனியப்பன்

கரு.பழனியப்பன்

கரு.பழனியப்பன்

சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பார்த்திபன் கனவு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கரு.பழனியப்பன். இந்தப் படம் இயக்குநராக நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு அரசு விருதை வென்றார்.

அதன் பிறகு அவர் இயக்கிய சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மந்திர புன்னகை என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, கள்ளன், டி பிளாக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிறந்த பேச்சாளராக அறியப்படும் கரு.பழனியப்பன் திராவிட கருத்துக்களை மேடைகளில் பேசிவருகிறார். இதன் ஒரு பகுதியாக ஜி தமிழில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா என்ற விவாத நிகழ்ச்சியையும் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கிவருகிறார்.

இந்த நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கரு.பழனியப்பன் அறிவித்துள்ளார். அவரது பதிவில், எங்கெங்கோ இருந்து பிறந்தநாள்

வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள் !!! இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது. தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட " தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.

சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. உடன் நின்ற அனைவருக்கும் மீண்டும் அன்பு! நன்றி ! முத்தங்கள் ! எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில், விரைவில் சந்திப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Karu palaniappan, Zee tamil