• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திருமண நாளை கோவிலில் கொண்டாடிய நட்சத்திர தம்பதி - ரசிகர்கள் வாழ்த்து மழை!

திருமண நாளை கோவிலில் கொண்டாடிய நட்சத்திர தம்பதி - ரசிகர்கள் வாழ்த்து மழை!

 கார்த்திக் வாசு மற்றும் அவரது மனைவி

கார்த்திக் வாசு மற்றும் அவரது மனைவி

இருவருக்கும் சின்னத்திரை பிரபலங்களான கிருத்திகா லட்டு, தனலட்சுமி சிவா, ரேவதி ஞானமுருகன், ஈஸ்வர் ரகுநாதன் உள்ளிட்டோரும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

  • Share this:
பூவே பூச்சூடவா சீரியலில் நடித்த கார்த்திக் வாசு, 3வது திருமண நாளை மனைவியுடன் கோவிலுக்கு சென்று கொண்டாடியுள்ளார்.

பூவே பூச்சூடவா சீரியலில் சிவா கதாப்பாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கார்த்திக் வாசு. 2018 ஆம் ஆண்டு நந்துஜெய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். செப்டம்பர் 6 ஆம் தேதியுடன் அவர்களின் திருமணம் தற்போது 3வது ஆண்டை எட்டியுள்ளதால், மகிழ்ச்சியடைந்துள்ள கார்த்திக் வாசு, மனைவியுடன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். அங்கு மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, இன்றுடன் 3வது ஆண்டு திருமண நாளை நிறைவு செய்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், இந்த நல்ல நாள் நல்ல தொடக்கமாக அமைத்திருப்பாகவும், விரைவில் புதிய புரொஜெக்டுகள் குறித்த அறிவிப்பை தெரிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். அவரைப்போலவே மனைவி நந்துஜெய்யும், கணவருக்கு திருமண நாள் வாழ்த்து கூறி, இந்த ஆண்டு மிகவும் ஸ்பெஷலானது எனத் தெரிவித்துள்ளார். மகன் ரிஷானுடன் 3வது திருமணநாளை கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி, நீயே என் வாழ்க்கை, நீ இன்றி நானில்லை, ஐ லவ்யூ கார்த்திக்வாசு என பதிவிட்டுள்ளார்.

இருவருக்கும் சின்னத்திரை பிரபலங்களான கிருத்திகா லட்டு, தனலட்சுமி சிவா, ரேவதி ஞானமுருகன், ஈஸ்வர் ரகுநாதன் உள்ளிட்டோரும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இன்றுபோல் என்றும் மனமகிழ்ச்சியாக இருக்க தம்பதிகளுக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளனர். சின்னத்திரையை பொறுத்தவரை கார்த்திக் வாசு பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார். ஓவியா சீரியலில் சரவணனாகவும், பிரியமானவளிள் பிரபா, கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை, கல்யாணம் முதல் காதல் வரை ஆகிய தொடர்களில் கார்த்திக் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வெற்றித் தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்ததால் அவர், சின்னத்திரையில் பிரபலமானவராகவும் உள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Karthik Vasu (@karthikvasu_official)






குறிப்பாக, பூவே பூச்சூடவா தொடரில் ‘சிவா’ கதாப்பாத்திரம் மிகவும் பிரபலமானது. அந்தத் தொடரில் ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன், கிருத்திகா லட்டு, ஸ்ரீவர்ஷன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்த சீரியல் சுமார் நான்கரை ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடி, முன்னணி தொடராக மாறியது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய அந்தத் தொடர் அண்மையில் முடிவடைந்தது.

Also read... விரைவில் புதிய சாதனை படைக்க உள்ள சன் டிவி மெகா சீரியல்.. உற்சாகத்தில் ஆட்டம் போட்ட நடிகர்கள்!

பல்வேறு திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் நிறைந்த தொடராக இருந்தது. இதனால் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னணி தொடர்களின் வரிசையில் இடம்பிடித்தது. காதல், குடும்பம் பின்னணியை கொண்டதாக இருந்ததால் கதைக்களம் பரபரப்பாகவும், சென்டிமென்டாகவும் நகர்ந்தது. இந்நிலையில் அண்மையில் சீரியல் முடிவுக்கு வந்ததால், ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இருப்பினும், அந்த சீரியலுக்கு இணையாக புத்தம் புது சீரியல்களை ஜீ தமிழ் களமிறக்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: