Home /News /entertainment /

லவ்வோ லவ்வு.. சினேகன் - கன்னிகாவின் சிம்பிளான திருமண நாள் கொண்டாட்டம்!

லவ்வோ லவ்வு.. சினேகன் - கன்னிகாவின் சிம்பிளான திருமண நாள் கொண்டாட்டம்!

கன்னிகா - சினேகன்

கன்னிகா - சினேகன்

சினேகன் - கன்னிகா தங்களது முதலாமாண்டு திருமண நாளை ஹோட்டலில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கவிஞர் சினேகன் - கன்னிகாவின் முதலாம் ஆண்டு திருமண கொண்டாட்ட வீடியோ இணையத்தில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட சினேகன் இதுவரை 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.பெரிய அளவில் முகம் தெரியாத ஒரு நபராக இருந்த சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனார். அவருக்கு அதிகளவில் ஃபேன்ஸ் பக்கங்களும் உருவாகின. அதையடுத்து கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இணைந்தார்.2019 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியிலும் மற்றும் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிட்டார்.



    செம்ம ஜோடி.. இன்ஸ்டாவை கலக்கும் கண்ணன் - ஐஸ்வர்யா!

    இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சினேகனுக்கும் - டிவி நடிகை கன்னிகா ரவிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடந்தது.எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்த கன்னிகாவை சினேகன் கரம் பிடித்தார்,. இவர்களின் வயது வித்தியாசம் இணையத்தில் பேசும் பொருளானது. ஆனாலும் இவர்களின் காதல் ஒவ்வொரு முறையும் அந்த விமர்சனத்தை தூக்கி அடித்து விடுகிறது. திருமணத்திற்கு பிறகு கன்னிகா சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அதே போல் தனியாக யூடியூப் சேனலும் தொடங்கியுள்ளார்.

    3 குழந்தைகள்.. ஹேப்பியான லைஃப்.. வெளிநாட்டில் செட்டில் ஆன நடிகை சிந்து மேனன்!

    இதில் பல வீடியோக்களை வெளியிடுகிறார். இன்ஸ்டாவில் அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள், ஓவியம் வரையும் தருணங்கள், சினேகனுடன் செலவழிக்கும் விடுமுறை தினங்கள் என கன்னிகா பகிரும் அனைத்து போஸ்டுகளும் லைக்ஸ்களை அள்ளுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சினேகன் - கன்னிகா தங்களது முதலாமாண்டு திருமண நாளை ஹோட்டலில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Kannika Snekan (@kannikasnekan)






    அந்த வீடியோவை 2 தினங்களுக்கு முன்பு கன்னிகா தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Instagram, Viral

    அடுத்த செய்தி