Home /News /entertainment /

100-வது நாள் எட்பிசோடை கொண்டாடிய கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் குழு!

100-வது நாள் எட்பிசோடை கொண்டாடிய கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் குழு!

கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல்

கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல்

அகிலன், ஆதிரா திருமணத்தை நோக்கி பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் 100-வது நாள் எபிசோடில் நுழைந்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வெற்றிகரமாக 100 நாள் எபிசோடில் நுழைந்த கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் குழு அதனை கோலாகலமாக கொண்டாடியது.

    சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கன்னத்தில் முத்தமிட்டால். மனிஷா அஜித், திவ்யபத்மினி, சந்தோஷ் என பலர் இணைந்து நடித்து வரும் இந்த விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

    மதிமாறன் மனைவி சாருமதி அகிலனை கள்ளத்தனமாக காதலிக்க அகிலன் ஆதிராவை விரும்புவதாக ட்ராமா போட்டு திருமணம் வரை வந்து சாருமதியோடு வீட்டை விட்டு ஓடி விட அதன்பிறகு எதிர்பாராத சூழ்நிலையில் மதிமாறன், ஆதிராவுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்வதாக செல்கிறது சீரியல் கதைக்களம்.

    Also read... செந்தில் குடும்பத்தை அசிங்கப்படுத்திய நாகு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

    சீரியல் அகிலன், ஆதிரா திருமணத்தை நோக்கி பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் 100-வது நாள் எபிசோடில் நுழைந்துள்ளது. இதனை சீரியல் குழுவினர் கோலாகலமாக கொண்டாடி உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பலரும் சீரியல் குழுவினருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

    மேலும் சீரியலின் திருப்பு முனையான மதிமாறன், ஆதிரா திருமணம் அடுத்த வாரத்தில் நடக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி