ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அம்மா - மகள் பாசப்போராட்டம்: புத்தம் புது சீரியலை களமிறக்கிய ஜீ தமிழ்!

அம்மா - மகள் பாசப்போராட்டம்: புத்தம் புது சீரியலை களமிறக்கிய ஜீ தமிழ்!

கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல்

கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல்

Zee Tamil New Serial : "கன்னத்தில் முத்தமிட்டால்" என்ற புத்தம் புது சீரியலை ஒளிபரப்ப துவங்கி இருக்கிறது ஜீ தமிழ் சேனல்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

தமிழ் சின்னத்திரையில் மக்களின் மனம் கவர்ந்த பல சேனல்கள் இருந்து வருகின்றன. பொழுதுபோக்கை மையமாக கொண்ட பல சேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் மாறும் சீரியல்கள் தான் முக்கிய இடம் வகிக்கின்றன.

காலங்கள் சென்றாலும் கூட காட்சிகள் மாறாது என்பதை நிரூபிக்கும் வகையில் நிறைய டிவி சேனல்கள் வந்தாலும், விதவிதமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பானாலும் மாறாமல் இடம் பெறும் ஒன்றாக சுமார் 24 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகின்றன சீரியல்கள்.

தமிழகத்தில் சீரியல்களை பொறுத்தவரை நேரடி போட்டி 2 சேனல்களுக்கு தான். சீரியல்கள் விஷயத்தில் சன் டிவி மற்றும் ஸ்டார் விஜய் டிவி ஆகிய இரண்டுக்கும் இடையிலான கடும் போட்டி வாரா வாரம் வெளியாகும் TRP ரேட்டிங்கின் பட்டியலை பார்த்தாலே நம்மால் புரிந்து கொள்ள முடியும். இந்த சூழலில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்னும் வகையில் பல ஷோக்கள் மற்றும் சீரியல்களை டெலிகாஸ்ட் செய்து ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றன சில முன்னணி சேனல்கள்.

also read : பிக்பாஸ் அல்டிமேட் வெற்றி மேடையில் எமோஷ்னல் ஆன சிம்பு- என்ன சொன்னார் தெரியுமா?

 

அப்படிபட்ட முன்னணி சேனல்களில் ஒன்று தான் ஜீ தமிழ். இதற்கு முன் பல சீரியல்களை ஒளிபரப்பினாலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த "யாரடி நீ மோகினி" சீரியலை ஒளிபரப்பி, நாங்களும் போட்டிக்கு இருக்கிறோம் என்று TRP ரேட்டிங் பட்டியலில் சேர்ந்தது ஜீ தமிழ். யாரடி மோகினி சீரியலை மெகாஹிட்டாக்கினர் சின்னத்திரை ரசிகர்கள். இந்த சீரியல் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை ஜீ தமிழ் அதன்பிறகு களமிறக்கி உள்ளது.

also read : தமிழால் இணைவோம்... ஏ.ஆர்.ரஹ்மான், சிம்புவை தொடர்ந்து தமிழுக்கு ஆதரவாக அனிருத்!

' isDesktop="true" id="730059" youtubeid="q6r3hWYUMLc" category="television">

இந்நிலையில் ஏப்ரல் 11 2022 முதல் "கன்னத்தில் முத்தமிட்டால்" என்ற புத்தம் புது சீரியலை ஒளிபரப்ப துவங்கி இருக்கிறது ஜீ தமிழ் சேனல். திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு இந்த புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியல் Zee TV-யில் கடந்த 2018 செப்டம்பர் 3 முதல் ஜூலை 31, 2021 வரை ஒளிபரப்பான துஜ்சே ஹை ராப்தா (Tujhse Hai Raabta) என்ற இந்தி தொலைக்காட்சி தொடரின் ரீமேக் ஆகும்.

also read : பாரதி கண்ணம்மாவில் இன்னொரு பெரிய ட்விஸ்ட்... வெண்பாவே கொடுத்த ஹின்ட்!

இந்த சீரியலின் நாயகி ஆதிரா புத்திசாலியான டீன் ஏஜ் பெண். சில கசப்பான அனுபவத்தால் தனது அவளது வளர்ப்பு தாயான சுபத்ரா மீது வெறுப்பு கொள்கிறாள். வளர்ப்பு தாய் பற்றி நமது எண்ணமும், வெறுப்பும் தவறானது ஆதிரா ஒருகட்டத்தில் உணர்கையில் தாய் - மகள் உறவு வேறு பரிமாணத்திற்கு செல்கிறது. அதன் தொடர்ச்சியாக நிகழும் குடும்பம் சார்ந்த சம்பவங்களே இந்த சீரியலின் கதைகளமாக உள்ளது. கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் நாயகி ஆதிராவாக நடிகை மனிஷாஜித், சுபத்ராவாக நடிகை திவ்யா விஸ்வநாத், திருமாறன் ரோலில் நடிகர் சந்தோஷ், நடிகை அம்மு ராமசந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: TV Serial, Zee tamil