Home /News /entertainment /

டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருந்த பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகை!

டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருந்த பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகை!

கன்னத்தில் முத்தமிட்டால்

கன்னத்தில் முத்தமிட்டால்

திடீரென்று மனிஷாஜித் சீரியலில் இருந்து விலகி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலக்கி கொண்டிருக்கும் பிரபல சீரியலான கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் இருந்து லீட் ரோலில் நடிக்கும் நடிகை மனிஷாஜித் விலகியுள்ளார். இதுக் குறித்த தகவல்  இணையத்தில் வெளியாகியுள்ளது.

    தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மனம் கவர்ந்த பல நெடுந்தொடர்கள் காலை முதல் இரவு வரை ஒளிப்பரப்பாகி வருகின்றன. இதில் டி.ஆர்.பி போட்டியில் முன்னணி சேனல்கள் போட்டிப்போட்டு கொண்டு வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியல்களை அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழில் மதிய நேரத்தில் ஒளிப்பரப்பாகும் தொடர் ’கன்னத்தில் முத்தமிட்டால்’. இந்த சீரியல் ஜீ டிவியில் ஒளிபரப்பான துஜ்சே ஹை ராப்தா (Tujhse Hai Raabta) என்ற இந்தி தொலைக்காட்சி தொடரின் ரீமேக் ஆகும்.

    பிக் பாஸ் சீசன் 6ல் சர்ச்சை நடிகை? டி.ஆர்.பியில் கலக்க இப்படியொரு முடிவா?

    கதைப்படி சீரியலின் நாயகி ஆதிரா புத்திசாலியான டீன் ஏஜ் பெண். சில கசப்பான அனுபவத்தால் தனது அவளது வளர்ப்பு தாயான சுபத்ரா மீது வெறுப்பு கொள்கிறாள். வளர்ப்பு தாய் பற்றி நமது எண்ணமும், வெறுப்பும் தவறானது ஆதிரா ஒருகட்டத்தில் உணர்கையில் தாய் - மகள் உறவு வேறு பரிமாணத்திற்கு செல்கிறது. இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்து வந்தவர் மனிஷாஜித். இவர் குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார். அதன் பின்பு கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பான உயிரே சீரியல் மூலம் சின்னத்திரையில் பவித்ராவாக என்ட்ரி கொடுத்தார்.

    சிவகார்த்திகேயன் உண்மையில் எப்படிப்பட்டவர்? விஜய் டிவி பிரபலத்தின் வைரல் பதிவு!

    இந்த சீரியல் மனிஷாஜித்துக்கு மிகப் பெரிய ரீச்சை வாங்கி தந்தது. இந்நிலையில் தற்போது ஆதிராவாக கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் நடித்து வருகிறார். கதைப்படி இப்போது ஆதிராவின் திருமண எபிசோடுகள் பரபரப்பாக ஒளிப்பரப்பாகி வருகின்றன. இந்நிலையில் ஆதிராவாக நடிக்கும் மனிஷாஜித் சீரியலில் இருந்து விலகியுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    சில நாட்களுக்கு முன்பு இந்த சீரியலின் 100 வது எபிசோடு கொண்டாட்டத்தில் மனிஷாஜித்தும் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இப்போது திடீரென்று மனிஷாஜித் சீரியலில் இருந்து விலகி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பது தற்போது வரை தெரியவில்லை.  ஆதிராவாக அடுத்து நடிக்க போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி