• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் மீராவை அழ வைத்த அப்பா கெளதம்!

சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் மீராவை அழ வைத்த அப்பா கெளதம்!

கண்ணானே கண்ணே சீரியல்

கண்ணானே கண்ணே சீரியல்

வீடியோவை பார்த்த ரசிகர்கள் பாவம் மீரா, இப்படியா பயப்பட வைப்பது என பிருத்வியை திட்டுகிறார்கள்.

  • Share this:
    சன் டிவியின் ஹிட் சீரியலான கண்ணான கண்ணே மீராவை அவரின் அப்பா கெளதம் கத்தி அழ வைத்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

    வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை நடிகர் நடிகைகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றனர். அதிலும் விஜய் டிவி, சன் டிவி சீரியல் நடிகர் நடிகைகள் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்களை பின் தொடரவே ஒரு கூட்டம் தனியாக இருக்கிறது. இந்த 2 சேன்லகளில் ஒளிப்பரப்பாகும் சீரியல் நடிகர், நடிகைகள் எது செய்தாலும் உடனே அது வைரலாகி பெரிய செய்தியாகவே மாறி விடுகிறது. அந்த வகையில் சன் டிவியில் பீக் டைமில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல் கண்ணானே கண்ணே. அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் ஒரு மகளின் கதை தான் கண்ணானே கண்ணே ஒன்லைன். இதில் மீராவாக, பீர்த்தியாக, யுவாக நடிக்கும் நடிகர்  நடிகைகளுக்கு ஒரு தனி ஃபேன்ஸ் ஃபாலோ உண்டு. மீராவாக நடிக்கும் நிமிஷிகா சின்னத்திரை கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    இவர் அண்மையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் கத்தி பயந்து அழும் வீடியோ இன்ஸ்டாவில் வெளியானது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மீரா பயந்து கத்த காரணமே, அவருக்கு அப்பா ரோலில் நடிக்கும் பப்லு பிருத்விராஜ் தான்.பிருத்வி தான் மீராவை பயப்பட வைக்கிறார். இதை அவரே தன் இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பாவம் மீரா, இப்படியா பயப்பட வைப்பது என பிருத்வியை திட்டி வைக்கிறார்கள். அப்படி என்ன செய்தார் தெரியுமா அவர்? மீரா இன்ட்ரஸ்ட்டாக ஷாட்டுக்கு ரெடி ஆகி கொண்டிருக்கிறார். மீரா சரியாக லிப்ஸ்டிக் போடும் போது பிருத்வி பாம்பு போல் சத்தத்தை கொடுத்து கொண்டே மீராவின் காலை தொடுகிறார். இதனால் பயத்தில் மீரா கத்தி அலறி பயத்தில் அங்கேயே உட்கார்ந்து விடுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்நியாயத்திற்கு மீரா பயப்படும் வீடியோ பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது. கண்ணானே கண்ணே சீரியலிலும் மீராவின் ரோல் ரொம்ப பாவம் தான். ராசி இல்லை என் அப்பா கெளதம் மீராவை வெறுத்து ஒதுக்குகிறார். ஆனால் அவரின் பாசத்துக்காக விடாமல் போராடும் மீராம் எத்தனையோ முறை அவமானப்பட்டாலும் அப்பாவை விட்டு கொடுக்கவே மாட்டார். இதனால் தான் ரசிகர்கள் பிருத்வியை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். சீரியலில் தான் கெளதம் அப்பா ரோலில் மீராவை தினமும் அழ வைக்கிறீர்கள்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Babloo Prithiveeraj இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@prithiveeraj)






    இப்படி ஆஃஃப் கேமிராவில் கூட ஏன் கெளதம் அப்பா இப்படி மீராவை அழ வைக்கிறீர்கள் என மீராவின் தீவிர ரசிகர்கள் பிருத்வியை கேள்வி கேட்கின்றனர். பிருத்வியை பொறுத்த வரையில் அவர் எப்போதுமே ஜாலியான கேரக்டர் என்பது மீடியாவில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். இந்த சீரியலின் மிகப் பெரிய வெற்றிக்கு கெளதமாக நடிக்கும் பிருத்வியும் மிக முக்கியமான காரணம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: