Home /News /entertainment /

சிம்புவை பற்றி சின்னத்திரை பிரபலத்தின் ஷாக்கிங் ஸ்டேட்மெண்ட்!

சிம்புவை பற்றி சின்னத்திரை பிரபலத்தின் ஷாக்கிங் ஸ்டேட்மெண்ட்!

சிம்பு

சிம்பு

சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில், பிரித்திவிராஜ் இப்படி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய நடிகைகள் மட்டுமல்ல நடிகர்களும் சீரியலில் நடித்து வருகின்றனர். ஒரு காலத்தில் ஆஹா... ஓஹோ என ஓடிய படங்களில் நடித்த ரஞ்சித், விக்னேஷ், பப்லு உள்ளிட்ட நடிகர்கள் சின்னத்திரையில் நடித்து வருகின்றனர். தற்போது சீரியல் அப்பாவாக கலக்கி வருகிறார் பப்லு பிரித்திவிராஜ்.

  கே.பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் பிரித்திவிராஜ். 2000களில் நாகா இயக்கிய நகைச்சுவை தொலைக்காட்சித் தொடரான ரமணி விசஸ் ரமணி மற்றும் அமானுசிய திகில் தொடரான மர்ம தேசம் ஆகிய இரண்டிலும் நடித்தார். இந்த சீரியல் பப்லுவிற்கு ரசிகர்களிடையே பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. இதனையடுத்து ராதிகா நடிப்பில் உருவான ‘அரசி’ சீரியலில் திருநங்கையாக நடித்து அசத்தினார்.

  ‘ராஜ ராஜேஸ்வரி’, ‘வாணி ராணி’ என பல சீரியல்கள் நடித்து வந்தவர், இடையில் ஜெயா டி.வி. ஒளிபரப்பான ‘சவால்’ என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். தற்போது சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் கதாநாயகி மீராவின் தந்தையாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் கெளதம் என்ற கதாபாத்திரத்தில் பிரித்திவிராஜும், அவரது மகள் மீரா கதாபாத்திரத்தில் நடிக்கும் நிமிக்ஷிதாவிற்கும் இடையிலான பாச போராட்டத்தை மையமாக வைத்தே கதை நகர்ந்து வருகிறது.

  சரஸ்வதிக்கு குடும்பத்தால் வரும் புது பிரச்சனை.. செம்ம கோபத்தில் தமிழின் அம்மா கோதை!

  சின்னத்திரை, சினிமா என பிசியாக இருக்கும் பப்லு பிரித்திவிராஜ் சிம்புவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிம்புவின் உடல் எடை குறைப்பு குறித்து பேசியுள்ள பப்லு, “சிம்பு உடல் எடையை குறைத்தது மிகவும் வியப்பானது. அதற்காக அவரை பாராட்டுகிறேன். ஆனால் உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் மீண்டும் குண்டாகிவிடுவார் என பலமுறை அட்வைஸ் செய்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

  BIGG BOSS : ஜாக்பாட் அடித்தது.. ரு. 15 லட்சத்துடன் பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறியது இவரா?

  தொடர்ந்து பேசிய அவர், “சிம்பு நான் தூக்கி வளர்த்த பையன் நான் என்ன சொன்னாலும் கேட்பார். ஆனால் வாய் கொஞ்சம் அதிகம்” என பேசியுள்ளது சிம்பு ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. பப்லுவின் பேச்சுக்கு சிம்பு ரசிகர்கள் சோசியல் மீடியாவில் எதிர்கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில், பிரித்திவிராஜ் இப்படி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.  விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன் சீசன் 2-வின் போது போட்டியாளராகவும் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியின் போது, நடிகரும் அந்நிகழ்ச்சியின் நடுவரான சிலம்பராசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவமும் அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனை மனதில் வைத்துக் கொண்டு தான் பிரித்திவிராஜ் இப்படி பேசியிருப்பார் என சிம்பு ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Simbu, Sun TV, TV Serial

  அடுத்த செய்தி