சென்னையில் இருந்ததால் தான் எனக்கு இது நடந்தது.... கண்ணான கண்ணே ப்ரீத்தி ஷேரிங்ஸ்!

கண்ணானே கண்ணே சீரியல் ப்ரீத்தி

அக்காவை விரும்பும் தங்கை. அவளுக்காக எதையும் செய்பவள்.

 • Share this:
  சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் கண்ணானே கண்ணே சீரியலில் தங்கை ப்ரீத்தி ரோலில் நடிக்கும் நடிகை அக்ஷிதா போபையாவின் வரலட்சுமி சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட்.

  சினிமா நடிகைகளைக் காட்டிலும் சின்னத்திரை நடிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் சினிமா நடிகைகள் ஒருபடம் நடித்தாலே போதும் அவர்களை பற்றி அனைத்து விவரங்களும் வெளியில் கசிந்து விடும். ஆனால் சின்னத்திரை நடிகைகள் கதை அப்படி இல்லை. பல சீரியல்களில் அவர்கள் வந்தாலும் கூட அவர்களின் சொந்த வாழ்க்கை பற்றியோ குடும்பம் பற்றியோ அவ்வளவு எளிதாக வெளியில் தெரிவதில்லை. சிலர் அதை அப்படியே மெயிண்டென் செய்கிறார்கள்.

  அந்த வகையில் சன் டிவி அழகு சீரியலில் அறிமுகமாகி இன்று கண்ணானே கண்ணே சீரியலில் ப்ரீத்தியாக கலக்கி கொண்டிருக்கும் அக்ஷிதா போபையா தமிழ் பெண் என்று பலரும் நினைத்திருப்பீர்கள். ஆனால் இல்லை அவர் கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவர்.பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கன்னட வெர்ஷன் வரலட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானர்.

  kannana kanne preethi
  கண்ணான கண்ணே ஷூட்டிங் ஸ்பாட்


  அந்த சீரியலுக்கு பின்னர் தான் இவருக்கு தமிழிலில் அழகு சீரியல் வாய்ப்பு கிடைத்தது.தொடர்ந்து தாழம்பூ மற்றும் ரெக்க கட்டி பறக்குது மனசு ஆகிய சீரியல்களில் நடித்தார். தற்போது சன்டிவியின் பிரபல சீரியலான கண்ணனா கண்ணே சீரியலில் நடித்து வருகிறார். இதில் அக்காவை விரும்பும் தங்கை. அவளுக்காக எதையும் செய்பவள். இந்த ரோலில் இளைஞர்களை அதிகம் கவர்ந்துவிட்டார் அக்ஷிதா.

  தொடக்கத்தில், தமிழ் மொழி பேச கஷ்டப்பட்ட இவர், இப்போது சரளமாக தமிழ் பேசுகிறார். பி 5, திரிவிக்ரமா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அந்த படங்கள் கூடிய விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. கண்ணானே கண்ணே சூட்டிங்கிற்காக சென்னையில் இருக்கும் இவருக்கு கன்னடத்தில் மிகப் பெரிய சீரியல் வாய்ப்பு ஒன்று வந்தது. ஆனால் அக்ஷிதாவால் கிளம்பி செல்ல முடியாத காரணத்தினால் அந்த வாய்ப்பை இழந்தார். இருப்பினும் கன்னடத்தில் சின்னத்திரையில் மிகச் சிறந்த இடத்தை கூடிய விரைவில் பிடிப்பேன் என்று உறுதியாக சொல்கிறார்.
  Published by:Sreeja Sreeja
  First published: