• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மீரா தங்கை ப்ரீத்திக்கு இப்படியொரு திறமையா? குவியும் பாராட்டுக்கள்!

மீரா தங்கை ப்ரீத்திக்கு இப்படியொரு திறமையா? குவியும் பாராட்டுக்கள்!

கண்ணானே கண்ணே சீரியல் ப்ரீத்தி

கண்ணானே கண்ணே சீரியல் ப்ரீத்தி

இது கடவுளின் சொந்த நாட்டிலிருந்து வந்த பாரம்பரியக் கலைகளில் ஒன்றாகும்

  • Share this:
    சன் டிவி-யின் ஹிட் சீரியல்கள் வரிசையில் முக்கியமான இடத்தில் இருப்பது கண்ணான கண்ணே.

    இந்த சீரியலில் நடிகை நிமிக்ஷிதா, நடிகர் ராகுல் ரவி, நடிகர் பிரித்விராஜ், நடிகை நித்யா தாஸ், நடிகை பிரீத்தி சஞ்சீவ், நடிகை சுலக்சனா , நித்யா ரவீந்தர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். திங்கள் முதல் சனி வரை இரவு 8.30-க்கு ஒளிபரப்பாகி வரும் இந்த கண்ணான கண்ணே சீரியலில் நாயகி மீரா குடும்பத்தை சேர்ந்தவராக ப்ரீத்தி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை அக்ஷிதா போபையா. இவர் அண்டை மாநிலமான கர்நாடகத்தை சேர்ந்தவர் ஆவார்.

    கண்ணான கண்ணே சீரியலில் ஸ்டைலான தோற்றம் மற்றும் இயல்பான நடிப்பு மூலம் எண்ணற்ற தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஸ்டார் விஜய் டிவி-யில் மெகாஹிட் சீரியலாக ஓடி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸின், கன்னட வெர்ஷனான வரலட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி அங்குள்ள ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். தமிழில் சன் டிவி-யில் ஒளிபரப்பான அழகு சீரியல் மூலம் அறிமுகமானார். அதில் நிவேதிதா என்ற கேரக்டரில் நடித்தார் அக்ஷிதா போபையா. பின்னர் தமிழில் இந்த சீரியலை தொடர்ந்து தாழம்பூ மற்றும் ரெக்க கட்டி பறக்குது மனசு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நடிகை அக்ஷிதா போபையாவிற்கு தமிழில் கண்ணான கண்ணே சீரியல் நான்காவது சீரியல் ஆகும். நடிகை அக்ஷிதா தனது ஓய்வு நேரத்தில் புதிய விஷயங்களைக் கற்று கொள்ள விரும்பும் துடிப்பான பெண் ஆவார். இது தவிர இவர் ஒரு தீவிர பயண பிரியர் என்பதால் புதிய இடங்களை தேடி அதிகம் பயணம் செய்வார். சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை அக்ஷிதாவிற்கு இசை மீது எப்போதும் ஆர்வம் அதிகம். சமீபத்தில் நடிகை அக்ஷிதா கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவி ஒன்றை வாசிக்க முயற்சி எடுத்துள்ளார்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Akshitha Bopaiah இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@akshitha_bopaiah)






    இதை சமீபத்திய தனது இன்ஸ்டா போஸ்ட் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். கேரளவில் பிரபலமாக இருக்கும் செண்டை மேளத்தை தான் வாசிக்க கற்று கொண்டது பற்றிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். "இந்த கருவி அதன் உரத்த மற்றும் கடினமான ஒலிக்காக மிகவும் பிரபலமானது. இது கேரளா மற்றும் துளு நாட்டில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது". நான் இதை வாசிக்க ஒரு சிறு முயற்சி செய்தேன். ஆனால் முறையாக வாசிப்பவர்களுடன் எனது வாசிப்பை மேட்ச் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது.மேலும் நீங்கள் சிறந்தவர்கள், இது கடவுளின் சொந்த நாட்டிலிருந்து வந்த பாரம்பரியக் கலைகளில் ஒன்றாகும் என்று தனக்கு செண்டை மேளத்தை வாசிக்க உதவிய கலைஞர்களை பாராட்டி இருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: