Kannana Kanne : சன் டிவி சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

Kannana Kanne

கண்ணான கண்ணே நித்யா தாஸ் தனது மகளுடன் வெளியிட்ட ஒரு புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

  • Share this:
சன் டிவி சீரியலைகளுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அன்று முதல் இன்று வரை இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கு விருப்பத்தில் சன் டிவி சீரியல்களுக்கும் ஒரு இடம் உண்டு. அந்த வகையில், சன் டிவியில் இப்போது ஒளிபரப்பட்டு வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் "கண்ணான கண்ணே".

இந்த சீரியலில் பப்லு பிரித்விராஜ், லிவிங்ஸ்டன், நித்யா தாஸ், ராகுல் ரவி, அக்ஷிதா, நிமேஷிகா உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த தொடரில் யுவாவாக ராகுல் ரவியும், மீராவாக நிமேஷிகாவும் நடிக்கின்றனர்.

இந்த சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் யுவா யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீரியலில் கதாநாயகிக்கு சித்தியாகவும் பிரித்விராஜின் மனைவியாகவும் வருபவர் தான் நித்யா தாஸ். இவர் இதற்கு முன் பைரவி என்ற தொடரிலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

ALSO READ |  மூன்று ஜட்ஜ்களுடன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி டீசர் வெளியானது!

இவர், சீரியல்களில் நடிப்பது மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது மகளுடன் வெளியிட்ட ஒரு புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. தனது மகள் நைனாவுடன் அவர் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியானது.அதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இருவரும் பார்ப்பதற்கு ட்வின் சிஸ்டர்களை போல இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ALSO READ |  பாஜகவின் ஆட்சி முறையை திரைப்படங்களில் சாடியதற்காகவே நடிகர் விஜய்க்கு மறைமுக அழுத்தங்கள் - சீமான் குற்றச்சாட்டு

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற கண்ணான கண்ணே சீரியல், அப்பாவின் அன்புக்காக ஏங்கும் ஒரு மகளின் கதையை அடித்தளமாக கொண்டது. மேலும் மகள் மீரா தனது தந்தையின் பாசத்தை பெற எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்தவர். அதுபோல தனது அப்பாவுக்காக தான் காதலித்த யுவாவை தனது சித்தி மகள் ப்ரீத்திக்காக விட்டுக் கொடுத்து விடுகிறார்.யுவா மற்றும் ப்ரீத்தி ஆகியோருக்கு திருமணம் பிரமாண்டமாக ஏற்பாடாகி இருக்கும் நிலையில், அந்த விழாவுக்காக ஒட்டுமொத்த சொந்தங்களும் வந்து இருக்கிறார்கள். இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்யாண வைபோகம் என்ற பெயரில் 2 மணி நேர ஸ்பெஷல் எபிசோடும் ஒளிபரப்பப்பட்டது.

ALSO READ |  விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் ராதிகா ஆப்தே!

தற்போது, யுவா ப்ரீத்தி திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இறுதியில், யுவா மற்றும் மீரா காதலித்த விஷயம் சித்திக்கு தெரியவர, கல்யாணத்தை நிறுத்த முயல்கிறார். ஆனால் தந்தைக்காக இந்த திருமணம் நடக்க வேண்டும் என மீரா கேட்டுக்கொள்கிறார்.இந்த நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் யுவா மீரா கழுத்தில் தாலி கட்டுவது போன்ற காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. யுவா மீராவை திருமணம் செய்வாரா அல்லது ப்ரீத்தியை திருமணம் செய்வாரா என எபிசோட் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

  

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: