Home /News /entertainment /

’கண்ணான கண்ணே’ சீரியலில் வர போகும் முக்கிய திருப்பம்!

’கண்ணான கண்ணே’ சீரியலில் வர போகும் முக்கிய திருப்பம்!

கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே

திருவிழாவில் மீராவை கொலை செய்யவும் சதி நடக்கிறது.

    சன் டி.வி.யின் ப்ரைம் டைம் சீரியலான ’கண்ணான கண்ணே’ தொடர்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் அடுத்த வாரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத முக்கிய ட்விஸ்ட் அரங்கேறவுள்ளது. இதுக் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

    சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிப்பரப்பாகும் கண்ணான கண்ணே சீரியல் தெலுங்கில் வெளியான 'பௌர்ணமி' மற்றும் கன்னடத்தில் ஒளிபரப்பான 'மானசரே' போன்ற தொடர்களின் கதைக்கருவை மையமாக வைத்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது ஆகும். இதில் லீட் ரோலில் நிமிக்ஷிதா, ராகுல் ரவி, பிரித்திவிராஜ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் கெளதம் என்ற தந்தை கதாபாத்திரத்தில் பிரித்திவிராஜ் நடிக்க, அவரின் மகளாக புதுமுக நடிகை நிமிக்ஷிதா மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ராகுல் ரவி என்பவர் 'யுவா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த சீரியலில் சிறப்பு தோற்றமாக இனியா இருந்து வருகிறார்.

    1 கோடி போச்சு.. அதிர்ச்சியில் ராஜா ராணி 2 அர்ச்சனா!

    நீண்ட இடைவெளிக்கு பிறகு அத்தை ரோலில் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார் ப்ரீத்தி. மீராவை வெறுக்கும் தந்தையாக பிரித்திவிராஜும், அப்பாவின் பாசம் கிடைக்காதா? என ஏங்கும் மகளாக மீரா ரோலில் நிமிக்ஷிதாவும் நடித்து வருகின்றனர். இப்போது கதைப்படி மீராவின் அம்மாவும் கெளதமின் மனைவியுமான கவுசல்யாவின் சொந்த ஊருக்கு அனைவரும் சென்று உள்ளனர். கிராமத்தில் ஊர் திருவிழா நடக்கிறது. அதில் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

    பாக்கியலட்சுமியில் அந்த விஷயத்தை சொல்லி கோபியை மிரட்டும் ஈஸ்வரி அம்மா!

    நேற்றைய எபிசோடில் அம்மாவை போலவே கண்டாங்கி சேலை கட்டி அனைவரையும் மீரா ஆச்சரியப்படுத்துகிறார். அவரை பார்த்து அப்பாவான கெளதம் ஷாக் ஆகி விடுகிறார். இந்த திருவிழாவில்  மீராவை கொலை செய்யவும் சதி நடக்கிறது. இந்நிலையில் கண்ணான கண்ணே சீரியலில் அடுத்த ட்ராக் குறித்த செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன.



     




    View this post on Instagram





     

    A post shared by @tamilserial_fc_malaysia






    அதாவது வரும் நாட்களில் மீரா கர்ப்பமாக இருப்பது போல் காட்சிகள் வரவுள்ளன. இதுக் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. யுவாவிடம் மீரா இந்த விஷயத்தை சொல்லி சந்தோஷப்பட இருப்பது, அம்மா கவுசல்யா மீண்டும் வர போகிறார் என மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் குதிப்பது என காட்சிகள் வரவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, Television, TV Serial

    அடுத்த செய்தி