• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கொரோனா தந்த சோதனை.. கைவிட்ட அந்த சேனல்கள்! மீண்டெழுந்த கண்ணான கண்ணே மீரா ஸ்டோரி

கொரோனா தந்த சோதனை.. கைவிட்ட அந்த சேனல்கள்! மீண்டெழுந்த கண்ணான கண்ணே மீரா ஸ்டோரி

கண்ணான கண்ணே சீரியல்

கண்ணான கண்ணே சீரியல்

ஆரம்பத்தில் இவர் மீடியாவை தேர்ந்தெடுத்தது அவரின் குடும்பத்தில் யாருக்குமே பிடிக்கலையாம்.

  • Share this:
    சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் கண்ணான கண்ணே சீரியல் மீரா லோக்கல் சேனலில் ஆங்கராக இருந்து இன்று சின்னத்திரை நடிகையாக முன்னேறியுள்ளார்.

    கண்ணான கண்ணே சன் டிவியில் ரோஜாவுக்கு அடுத்தப்படியாக பலரின் உள்ளம் கவர்ந்த சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் யுவா- மீரா ஜோடிக்கு பயங்கரமான ஃபேன்ஸ் பட்டாளம். இவர்களின் காதல் காட்சிகள், ரொமான்ஸ் என சோஷியல் மீடியாவில் பயங்கர ரீச். அப்பா மகளின் பாச போராட்டத்தை சொல்லும் இந்த கதையில் பிருத்விராஜ் அப்பாவாக நடிக்க, அவரின்ன் வெறுப்பை சம்பாதிக்கும் மகளாக மீரா ரோலில் நடிகை நிமிஷிகா நடிக்கிறார். இவரை மீரா என்றால் தான் பலருக்கும் தெரியும். தனது அமைதியான நடிப்பால், ஆர்ப்பாட்டம் இல்லாத அழகால் சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்களை அமைத்துக் கொண்டார் மீரா. இதுதான் இவரின் முதல் சீரியல் என்றால் இல்லை.

    ஆனால் மீராவுக்கு ஹிட் கொடுத்து பெயர் வாங்கி தந்துள்ள சீரியல் என்றால் அது கண்ணான கண்ணே தான். காரணம் இதற்கு முன்பு இவர் நடித்த 2 சீரியல்களும் கொரோனாவால் தடைப்பட்டு பாதியிலேயே நின்று போனது. அந்த இரண்டு பெரிய சேனல்களும் கைவிட, சன் டிவி கண்ணான கண்ணே கைக்கொடுத்து மீராவுக்கு நல்ல ரீச்சை வாங்கி தந்துள்ளது. மீராவின் சொந்த ஊர், ஆந்திரா மாநிலம் குண்டூர். படிப்பிற்காக கோயம்புத்தூர் வந்தவர் அங்கே செட்டில் ஆனார். பேஷன் டெக்னாலஜி முடித்துள்ள இவருக்கு முதன் முதலில் கோவையில் உள்ள லோக்கல் சேனலில் காம்பியராக இருக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன் பின்பு மீராவுக்கு விஜய்டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது நீலாம்பரி என்ற கேரக்டரில் நெகட்டிவ் ரோலில் நடித்தார். அடுத்து, மலையாளத்தில் அனுராகம் என்னும் சீரியலில் நடித்து வந்தார். இரண்டுமே கொரோனாவால் நிறுத்தப்பட்டது. அதன் பின்பு தான் கண்ணானே கண்ணே வாய்ப்பு கிடைத்தது. இடையில் இடையில் மீரா மாடலிங்கும் செய்து வருகிறார். அவ்வப்போது ஃபோட்டோஷூட் நடத்தும் மீரா இன்ஸ்டாகிராமில் பயங்கர பிஸி. சீரியலில் மீரா போடும் ட்ரெஸ்கள் எல்லாமே அவரின் சொந்த டிசைன் தானாம்.

    தற்போது மீராவாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துவிட்டவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பது தீராத ஆசையாக உள்ளது. ஆரம்பத்தில் இவர் மீடியாவை தேர்ந்தெடுத்தது அவரின் குடும்பத்தில் யாருக்குமே பிடிக்கலையாம். தனது ஃபேஷன் மீது நம்பிக்கை கொண்டவர் இன்று தனது பெற்றோரை பெருமைப்படுத்திவிட்டார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: