• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 47 ஆண்டு திரைப்பயணம்.. மகனுக்காக ஆட்டிஸம் விழிப்புணர்வு.. ரியல் ஹீரோ கெளதம் அப்பா!

47 ஆண்டு திரைப்பயணம்.. மகனுக்காக ஆட்டிஸம் விழிப்புணர்வு.. ரியல் ஹீரோ கெளதம் அப்பா!

கண்ணான கண்ணே கெளதம்

கண்ணான கண்ணே கெளதம்

ஒரு நாள் மகனுக்கு ஆட்டிஸம் குறைப்பாடு என தெரிய வந்தது உலகமே இடிந்து விழுந்ததாக உணர்ந்தவர்

  • Share this:
    47 ஆண்டுகள் திரைப்பயணத்தை கடந்து தனது மகனுக்காக ஆட்டிஸம் விழிப்புணர்வு போராளியாகவும், சிறந்த தந்தையாகவும் வாழும் நடிகர் பப்லு பிருத்விராஜின் ரியல் லைவ் ஸ்டோரி.

    நடிகர் பப்லு பிருத்விராஜை தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு வெறும் நடிகராகவும், வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் தான் தெரியும். ஆனால் உண்மையில் பப்லுவை ரியல் லைஃப் ஹீரோ என்றே சொல்லலாம். தனக்கு ஒரு ஆட்டிஸம் குழந்தை பிறந்துள்ளது, அவனை சரியாக வளர்ப்போம் அதோடு நம் கடமை முடிந்தது என சாதாரண மனிதர்கள் போல் எண்ணாமல் தன் மகனை போல் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்காகவும் ஆட்டிஸம் குறித்த விழிப்புணர்வு செய்து வருகிறார். அதுமட்டுமில்லை இதுப் போன்ற குழந்தைகளின் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும், சமூகம் அவர்களை எப்படி பார்க்க வேண்டும், அவர்களின் தேவைகள் மற்றும் புரிதல்கள் என்ன என்பதை தனது விழிப்புணர்வு மூலம் எடுத்துரைக்கிறார். வெறும் சினிமாவில் நடிப்பதோடு மட்டும் இல்லாமல் ரியல் லைஃபில் ஹீரோவாக வாழ்ந்து வருகிறார் பப்லு.

    இவர் சினிமாவுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இப்போதுள்ள காலகட்டத்தில் தமிழ்த் திரையுலகில் நடிகர் ஒருவர் ஐந்து ஆண்டுகள் தாக்குப்பிடிப்பதே மிகவும் கடினமாகவிருக்கும் சூழ்நிலையில் கடந்த 1980 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டு இப்போது சின்னத்திரையில் வில்லனாகவும், துணை நடிகராகவும் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக ‘நான்கு சுவர்கள்’ படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். இவரை அறிமுகப்படுத்தியது இயக்குனர் சிகரம் கே.பி தான். 68 படங்கள் வரை குழந்தை நடசத்திரமாக நடித்துள்ள இவர் , வளர்ந்த பிறகு வானமே எல்லை, அவள் வருவாளா, உள்ளிட்ட 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சின்னத்திரையில் சன் டிவியில் இவர் நடித்த அனைத்து சீரியல்களும் சூப்பர் டூப்பர் ஹிட், ஜெயா டிவியில் சவால் நிகழ்ச்சியை 5 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிக்கரமாக நடத்தினார். ராதிகாவுடன் செல்வி, வாணி ராணி சீரியல்களிலும் நடித்தார். தற்போது சன் டிவியில் ஹிட் சீரியலான கண்ணான கண்ணே சீரியலில் மகளை வெறுக்கும் கெளதம் அப்பா ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் வெற்றிக்கு இவரின் நடிப்பு மிக முக்கியமான காரணம் என்றே சொல்லலாம்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Babloo Prithiveeraj இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@prithiveeraj)






    திரைபடங்களிலும் நடித்து வந்த காலத்திலே திருமணம் செய்து கொண்டார். பின்பு பிருத்விக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு "அஹத்" என்று பெயர் வைத்து பாசமாக வளர்த்தார். அப்போது தான் ஒரு நாள் மகனுக்கு ஆட்டிஸம் குறைப்பாடு என தெரிய வந்தது உலகமே இடிந்து விழுந்ததாக உணர்ந்தவர் அன்றிலிருந்து இன்றுவரை அஹத்காகவே தனது மொத்த வாழ்க்கையும் அர்பணித்து அவனுக்கு ஹீரோ போல் இருக்கிறார். பப்லு மற்றும் அவரின் மனைவி இருவரும் சேர்ந்து பேசி மற்றொரு குழந்தை பற்றி சிந்திக்காமல் ஒரு மகனையே எந்த குறையும் இன்றி பார்த்து வருகிறார்கள்."வீ கேன்" அமைப்பு மூலம் பப்லுக்கு விருது வழங்கியும் கெளரவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: