நடிகர் சஞ்சீவின் மனைவியும் பிரபல சீரியல் நடிகையுமான ப்ரீத்தி சஞ்சீவ் மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.
தமிழ் சினிமாவிலும், சீரியலிலும் உடன் நடித்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது என்பது புதிதல்ல. சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து, பின் நாட்களில் ரியல் ஜோடிகளான சின்னத்திரை பிரபலங்கள் ஏராளம். அந்த வகையில் வெவ்வேறு சீரியல்களில் நடித்த சஞ்சீவ் - ப்ரீத்தி ரசிகர்களால் மிகவும் கொண்டாட்டப்படும் நட்சத்திரங்கள் ஆவர். நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பராக அறியப்படும் சஞ்சீவ், சினிமாவில் நடித்துவிட்டு சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தினார். ‘மெட்டிஒலி’ தொலைக்காட்சி தொடரில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சி துறையில் நுழைந்தார் சஞ்சீவ். பல எதிர்மறை கதாபாத்திரங்களை செய்த பிறகு, திருமதி செல்வம் என்ற தொடாில் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடித்தாா். அவரை ‘திருமதி செல்வம்’ சீரியல் நிரந்தர சின்னத்திரை நாயகனாக்கியது.
வருங்கால மனைவியின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய சீரியல் நடிகர்!
அதே போல் அவரடு மனைவி ப்ரீத்தியும் பாலசந்தர் மூலம் சீரியலில் அறிமுகமானார். அதன் பின்பு சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி என ப்ரீத்தி பயங்கர பிஸியான ஆர்டிஸ்ட். அதுமட்டுமில்லை, நடிகர் டிங்கு உடன் சேர்ந்து ஜோடி நம்பர் ஓன் நிகழ்ச்சியில் கலக்கினார். அந்த சீசனின் டைட்டில் வின்னரும் இந்த ஜோடி தான். ப்ரீத்தியை மணந்த சஞ்சீவுக்கு லயா, ஆதவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.ப்ரீத்தியை பற்றி சின்னத்திரையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். பக்க கிளாஸிக்கல் டான்ஸ்டர்.
பாக்கியாவை சந்தித்த ராதிகா! பாக்கியலட்சுமியில் அடுத்து என்ன நடக்கும்?
கணவர்,பிள்ளைகள் என குடும்பத்தில் பிஸியானதால் சின்னத்திரைக்கு பாய் சொன்னார் ப்ரீத்தி. கொரோனா லாக்டவுனில் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் கவனம் செலுத்த தொடங்கினார். அப்போது தான் சஞ்சீவுக்கு பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார். அப்போது தான் ப்ரீத்தியை மீண்டும் சின்னத்திரையில் பார்க்க முடிந்தது. சில யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். ஃபீரிஸ் டாஸ்கில் குழந்தைகளுடன் சஞ்சீவ்வை பார்க்க பிக் பாஸ் வீட்டுக்கும் வந்தார்.
அதன் பின்பு சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ’கண்ணான கண்ணே’ சீரியலில் வாசுகி என்ற ரோலில் நடித்து மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து நடித்து வந்தவர் மீண்டும் பிரேக் எடுத்தார். வாசுகி ஊருக்கு செல்வது போல் கதை காட்டப்பட்டது. திருமணத்திற்கு பிறகு வெயிட் அதிகமானதால் 1 வருடத்தில் கடின உடற்பயிற்சி செய்து 15 கிலோ வரை ப்ரீத்தி எடையும் குறைத்தார். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் மீண்டும் ப்ரீத்தி சன் டிவி கண்ணான கண்ணே சீரியலில் அதே வாசுகி ரோலில் என்ட்ரி கொடுக்கிறார். இதுக் குறித்த புரமோ வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.