• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அரங்கேறிய சோகம்... மருத்துவமனைக்கு ஓடோடி வந்த கண்ணன்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அரங்கேறிய சோகம்... மருத்துவமனைக்கு ஓடோடி வந்த கண்ணன்!

பார்வதி அம்மா பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடக்கிறார்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கண்ணனின் கல்யாணத்திற்கு பிறகு அடுத்தடுத்த சோகங்கள் நிகழ்ந்து வருகிறது. மகனின் பிரிவை தாங்க முடியாமல் பார்வதி அம்மாவும் மருத்துவமனையில் படுத்துவிட்டார்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குடும்ப பாங்கான, அண்ணன் - தம்பி பாசம் என இல்லத்தரசிகளை எளிதில் கவரக் கூடிய அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளது. சித்ராவின் மறைவுக்கு பிறகு சீரியலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சுவாரசியத்திற்கு குறைவு இல்லாமல் நல்ல டி.ஆர்.பி ரேட்டிங்கில் சீரியல் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில், கண்ணன் ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு திரைக்கதையில் ட்விஸ்டுகளுடன் பரப்பரப்பும் கூடியுள்ளது. இந்த திருமண எபிசோட் ஒளிப்பரப்பான வாரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய எபிசோடு ஹைலைட் மருத்துவமனைக்கு ஓடோடி வரும் கண்ணனிடம் மூர்த்தியும், ஜீவாவும் என்ன பேச போகிறார்கள் என்பது தான். வீட்டுக்கு தெரியாமல் கண்ணன் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். தங்க வீடு, வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறான். இதைப் பார்த்த அண்ணன்கள் - அண்ணிமார்கள் கண்ணனுக்கு பல்வேறு விதங்களில் உதவி இன்று கண்ணன் ஐஸ்வர்யாவுடன் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறான். தனம் அண்ணிக்கும் குழந்தை பிறக்க போவதால் மொத்த குடும்பமும் அதுக்குறித்த பதற்றத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் தான் பார்வதி அம்மா பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடக்கிறார்.

    வழக்கம் போல் காலையில் முல்லை எழுப்ப அவர் எழுந்துக்கவில்லை. மொத்த குடும்பமும் பயத்தில் ஆடி போய் நிற்க, உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கின்றனர். பார்வதி அம்மாவை டெஸ்ட் பண்ண டாக்டர், அவர் எதோ ஒரு விஷயத்தை எண்ணி கவலை கொள்வதாக, சரியாக சாப்பிடாமல் இருப்பதால் தான் இப்படி நடந்தது என்கின்றார். வேறு என்ன கண்ணன் விஷயம் தான். இதைப் புரிந்து கொண்ட மூர்த்தியும் ஜீவாவும் அம்மாவிடம் போய் பேசுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பார்வதி அம்மாவுக்கு ஒண்ணும் இல்லைன்னு தெரிஞ்சதும் முல்லை வீட்டுக்கு கிளம்புகிறார். கதிரிடம் பயப்பட வேண்டாம் அப்படின்னும் சொல்லிட்டு போறார். இதற்கிடையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் வேலை செய்யும் சரவணன் மூலம் அம்மா ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருக்கும் விஷயம் தெரிஞ்சி கண்ணன் துடித்து போகிறான். உடனே அம்மாவை பார்க்க ஆஸ்பிடலுக்கு ஓடுகிறான். மூர்த்தி, ஜீவாவுக்கு வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு வருகிறார் மீனா. அப்படியே அத்தை பார்வதியையும் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்கிறார்.

    இந்த நேரத்தில் தான் கண்ணன் ஆஸ்பிடலுக்கு வந்து மூர்த்தி - ஜீவாவிடம் பேசுகிறான். “அம்மாக்கு என்னாச்சு அண்ணே. நல்லா இருக்காங்களா” கண்ணனை பார்த்ததும் கோபத்தில் மூர்த்தி கத்த தொடங்குகிறார். கண்டிப்பாக கண்ணனுக்கு இந்த ஜென்மத்தில் மன்னிப்பு கிடையாது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: