முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செம்ம ஜோடி.. இன்ஸ்டாவை கலக்கும் கண்ணன் - ஐஸ்வர்யா!

செம்ம ஜோடி.. இன்ஸ்டாவை கலக்கும் கண்ணன் - ஐஸ்வர்யா!

கண்ணன் - ஐஸ்வர்யா

கண்ணன் - ஐஸ்வர்யா

தீபிகாவும் சரவண விக்ரமும் சேர்ந்து இன்ஸ்டாவை தெறிக்க விடுகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முன்னாள் ஜோடிகளான கண்ணன் - ஐஸ்வர்யாவின் சமீபத்திய ஃபோட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த விஜே தீபிகா, சில தவிர்க்க முடியாத காரணங்களால்  சீரியலை விட்டு பாதியிலேயே வெளியேறினார். இதனால் விஜய் டிவி ரசிகர்கள் வருத்தமடைந்திருந்தனர். ஐஸ்வர்யாவாக நடித்து வந்த தீபிகா மாற்றப்பட்டு, அந்த கதாபாத்திரத்தில் தற்போது ‘ஈரமான ரோஜாவே’ சாய் காயத்ரி நடித்து வருகிறார்.அதோடு தீபிகா மாற்றப்பட்டதற்கு அவரின் முகப்பரு தான் காரணம் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது தனக்கு இருந்த முகப்பரு பிரச்சனையை சரி செய்து விட்டு அழகில் ஜொலிக்கிறார் தீபிகா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பிறகு தொடர்ந்து பல சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்து விட்டார். சித்திரம் பேசுதடி, சில்லுன்னு ஒரு காதல் என இவர் நடித்த சீரியல்களில் செம்ம க்யூட்டான தனது நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். தனியாக யூடியூப் சேனல் தொடங்கியுள்ள தீபிகா அதில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரின் நெருங்கிய நண்பர் சரவணன விக்ரம் என்பது அனைவருக்கும் தெரியும். சரவணன விக்ரம் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி கண்ணன் ரோலில் தீபிகாவுக்கு ஜோடியாக  நடித்தார்.

இந்நிலையில் தீபிகாவும் சரவண விக்ரமும் சேர்ந்து இன்ஸ்டாவை தெறிக்க விடுகின்றனர். வித விதமான ஃபோட்டோஷூட், ஆல்பம் பாடல், ஷார்ட் பிலிம், ஷார்ட்ஸ் என இவர்களின் காம்போ பயங்கர ஹிட் அடித்துள்ளது. சமீபத்தில் இருவரும் வீட்டு மாடியில் நடத்திய ஃபோட்டோ ஷூட் படங்கள் லைக்ஸ்களை அள்ளியுள்ளது.


இந்த ஜோடியை செம்ம ஜோடி என ரசிகர்கள் புகழ்கின்றனர். அதே போல்  இருவரும் காதலிக்கிறீர்களா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


ஆனால் இந்த கேள்விக்கு தீபிகா ஏற்கெனவே விளக்கம் அளித்து இருந்தார். அன்றும், இன்றும், என்றுமே சரவண விக்ரம் என நண்பன் தான், அது எப்பவும் மாறாது எனவும் கூறி இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Instagram, Pandian Stores, Vijay tv