இன்னொரு முகத்தை காட்டிய கண்ணம்மா... ஷாக்கான ரசிகர்கள்!

பாரதி கண்ணம்மா

பாரதியை இடிப்பது, நெருங்கி உட்கார்ந்து சாப்பிடுவது என அட்டகாசம் செய்கிறார்.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் சமீபத்திய புரமோ கண்ணம்மாவின் இன்னொரு முகத்தை காட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நெடுந்தொடரான பாரதி கண்ணம்மா ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற சீரியலாகும். தொடர்ந்து டி.ஆர்,பியில் நல்ல ரேட்டிங்கில் சீரியல் சென்றுக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் கதையில் ட்விஸ்டுகள், பரப்பரப்புகள் என சீரியல் சென்றுகொண்டிருக்க, நீண்ட நாளுக்கு பின்பு கண்ணம்மா பேக் என்பது போல் பாரதி கண்ணம்மா சீரியல் புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. தனக்கு பிறந்தது 2 குழந்தைகள் என்ற உண்மையை தெரிந்து கொண்ட கண்ணம்மா சவுந்தர்யாவிடம் இதுப்பற்றி கேட்க பல முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்த நேரத்தில் அஞ்சலியின் சீமந்தம் நடக்க அந்த விழாவுக்கு மகள் லட்சுமியை அழைத்து வருகிறால். பாரதி உட்பட சவுந்தர்யாவின் மொத்த குடும்பமும் அங்கு இருக்க அடுததடுத்த எபிசோடுகள் சுவாரசியம் குறையாமல் சென்றுக் கொண்டிருக்கிறது.

  இதுவரை பாரதி - வெண்பா இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என நினைத்திருந்த கண்ணம்மாவுக்கு அஞ்சலி ஒரு உண்மையை தெளிவுப்படுத்தினார். அதாவது, வெண்பாவும் பாரதியும் கண்ணம்மாவை ஏமாற்றி வருவதாக உண்மையில் பாரதிக்கு திருமணம் ஆகவில்லை என அஞ்சலி சீமந்தத்தில் வைத்தே தெளிவுப்படுத்த வெண்பா செம்ம கடுப்பில் ஓரமாக நிற்கிறார். சவுந்தர்யாவுக்கு செம்ம ஹாப்பி. அதே நேரம் கல்யாணம் ஆகலனா, அப்ப ஹேமா யாரு என்ற கேள்வியும் கண்ணம்மா மனதில் எழுகிறது. இது ஒருபுறம் இருக்க, இப்போதைக்கு வெண்பாவை வெறுப்பு ஏத்துனா போதும் என்ற நிலைக்கு வந்த கண்ணம்மா தனது ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த புரமோ தான் தற்சமயம் வெளியாகியுள்ளது. சீமந்தம் விழாவில் பந்தி போட, தவறுதலாக பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து சாப்பிடுகின்றனர். இருவரின் குழந்தைகள் லட்சுமி ஹேமாவும் அவர்களோடு இருக்கின்றனர். இதை கண்டு ஒருபக்கம் சவுந்தர்யா, அஞ்சலி சந்தோஷப்பட, வெண்பா அவர்களுக்கு எதிர் பந்தியில் வந்து சாப்பிடுகிறார். இதைப்பார்த்த கண்ணம்மா, வெண்பாவை வேண்டுமென்றே வெறுப்பு ஏத்த, பாரதியை இடிப்பது, நெருங்கி உட்கார்ந்து சாப்பிடுவது என அட்டகாசம் செய்கிறார். இதைப் பார்த்த வெண்பா கொல காண்டில் அப்பளத்தை நொருக்கிறார். பார்ப்பதற்கு ரசிக்கும்படியான இந்த புரமோ ரசிகர்களிடம் லைக்ஸ்களை அள்ளுகிறது.  நீண்ட இடைவெளிக்கு பிறகு ரகளையான கண்ணம்மாவை பார்த்தது போல் இருப்பதாக ரசிகர்கள் கமண்ட் செய்து வருகின்றனர்.புரமோவே இப்படி என்றால் சீரியல் எபிசோடு? ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: