Home /News /entertainment /

அப்பா யார் என்ற உண்மையை போட்டுடைத்த பாரதி... ஆடிப்போன கண்ணம்மா!

அப்பா யார் என்ற உண்மையை போட்டுடைத்த பாரதி... ஆடிப்போன கண்ணம்மா!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

கண்ணம்மாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கடைசியில் பாரதியும் விழாவுக்கு செல்ல சம்மதிக்கிறார்.

    கிட்டத்தட்ட 2 வாரமாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த கண்ணம்மா பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. புரமோவை பார்த்த ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ், “ இதுக்கு பருத்தி முட்டை குடோன்லேயே இருந்திருக்கலாமே” என்பது தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் பொறுமையை சோதித்துவிட்டார் இயக்குனர்.

    விஜய் டிவியின் நம்பர் ஒன் டிஆர்பி சீரியல் ஆன பாரதி கண்ணம்மா சீரியல் இந்த முறையாவது அடுத்த கட்டத்திற்கு நகரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசியில் வழக்கம் போல் ஏமாற்றம் தான் மிச்சம். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக மறைக்கப்பட உண்மையை சொல்ல தயாரானார் கண்ணம்மா. இந்த எபிசோடுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பல ஆண்டுகளாக "ஜவ்வு" போல இழுத்து அடிக்கும் ஒரு மேட்டர் இந்த வாரம் முடிந்து விடும் என்பது போல் தெரிந்தது. ஆனால் கடைசியில் நடந்தது பிம்பிளிக்கி பிளாப்பி கதை தான்.

    இதையும் படிங்க.. சன் டிவி சுந்தரி சீரியலுக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை.. தாங்க முடியாத சந்தோஷத்தில் கேப்ரில்லா!

    அதாவது கண்ணம்மாவின் கணவரும்ம் லக்ஷ்மியின் அப்பா யார் என்கிற உண்மையை தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சொல்ல போவதாக கண்ணம்மா சபதம் போட்டு இருந்தார். , லட்சுமிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. இத்தனை ஆண்டுகளாக அப்பாவை பார்க்காமல் வளரும் லட்சுமிக்கு, கண்ணம்மா தனது பிறந்த நாள் அன்று உண்மையை சொல்ல போகிறார் என்று தெரிந்ததும் மொத்த வீட்டையும் அலங்காரம் செய்ய தயாராகிறாள்.

    இதையும் படிங்க.. கால் கிலோ ‘கில்லி’.. கால் கிலோ ‘மஜா’..விஜய் டி.வி. சீரியலை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

    ஸ்கூலுக்கு செல்லாமல், அப்பாவின் வருகைக்காக குழந்தை ஏங்கி இருந்தாள். அதே நேரம் பாரதியை எப்படியாவது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வர வைத்துவிட வேண்டும் என கண்ணம்மா நடையாய் நடந்தார். பாரதியிடம் கெஞ்சி கேட்டார், லட்சுமிக்காக இதை செய்ய வேண்டும், அவளிடம் அப்பா பற்றிய உண்மையை சொல்ல வேண்டும் என துடித்தார். பாரதி, பிறந்த நாள் விழாவுக்கு வர முடியாது என கூறிவிட்டார்.



    வேற வழியில்லாமல், கடைசியில் கண்ணம்மா பாரதியை தேடி சென்று ஒரு முக்கியமான ரகசியத்தை சொல்ல போவதாக கூறி பாரதியை கூப்பிடுகிறார். உடனே பாரதிக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை. அந்த நேரம் பார்த்து வில்லி வெண்பா, பாரதியை ஏற்றி விட,இந்த பிறந்த நாள் விழாவில் கண்ணம்மாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கடைசியில் பாரதியும் விழாவுக்கு செல்ல சம்மதிக்கிறார்.

    கண்ணம்மா கண்டிப்பாக உண்மையை சொல்லி விடுவார், அந்த ரகசியம் ஹேமா பற்றியதாக தான் இருக்கும் என ரசிகர்கள் திங்கட்கிழமை எபிசோடுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் இந்த வாரம் சீரியல் எபிசோடுக்கான புரமோ வெளியாகியுள்ளது. அதில் ரசிகர்கள் நினைத்து எதிர்பார்த்த ஒரு காட்சிகள் கூட இடம்பெறவில்லை. மாறாக பாரதி, லட்சுமியிடம் ‘உனக்கு அப்பா, அம்மா எல்லாமே கண்ணம்மா தான்” என்று சொல்லி முடித்து விடுகிறார். அதிர்ச்சியில் கண்ணம்மா தேம்பி தேம்பி அழுகிறார்.
    மொத்தத்தில் வழக்கம் போல் இயக்குனர் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி