Home /News /entertainment /

குழந்தை பிறந்து 1 வருடம் கூட ஆகவில்லை.. வில்லி வெண்பாவை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

குழந்தை பிறந்து 1 வருடம் கூட ஆகவில்லை.. வில்லி வெண்பாவை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

கண்ணம்மா வெண்பா

கண்ணம்மா வெண்பா

கெரியரில் கவனமாக இருக்கும் ஃபரீனா குழந்தை, குடும்பம், கணவர், தொழில் என அனைத்தையும் அசால்ட்டாக பேலனஸ் செய்கிறார்.

    பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடிக்கும் ஃபரீனாவின் இன்ஸ்டா பக்கத்தை பார்ப்பவர்களுக்கு தினமும் ஒரு ஆச்சரியத்தை தருகிறார் ஃபரீனா.

    விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி ரோலில் வெண்பாவாக நடிப்பவர் சின்னத்திரை நடிகை ஃபரீனா. ஆங்கராக தனது பயணத்தை தொடங்கியவர் இப்போது பிரபல சின்னத்திரை நடிகை லிஸ்டில் சேர்ந்துள்ளார். சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் திடீரென சீரியலை விட்டு விலகி விட்டாலும், வெண்பாவுக்காகவே அந்த சீரியலை ரசிகர்கள் மிஸ் செய்யாமல் பார்த்து வருகின்றனர். அதற்கு முக்கியமான காரணம் ஃபரீனாவின் நடிப்பு. நடிகை ரோஷினி எவ்வளவு ரசிகர்களை ஈர்த்தாரோ அதே அளவிற்கு நடிகை ஃபரீனா அசாத்தும் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டி எடுத்து இருக்கிறார்.

    பாலாஜி முருகதாஸ் வாழ்க்கையில் சந்தோஷமான நாள்.. வாழ்த்துக்களை ஷேர் செய்யும் ரசிகர்கள்!

    இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் தனது நீண்ட நாள் காதலரான ரஹ்மான் உபைத்தை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஃபரீனாவுக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. பிரசவ காலத்தில் 6 மாதம் ஓய்வு எடுத்தவர் மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தனர். தனது கெரியரில் கவனமாக இருக்கும் ஃபரீனா குழந்தை, குடும்பம், கணவர், தொழில் என அனைத்தையும் அசால்ட்டாக பேலனஸ் செய்கிறார்.

    ரசிகர்களிடம் தன் காதல் கதையை கூறி கண்கலங்கிய விஜே மணிமேகலை!

    இதுப்பற்றி ஏற்கெனவே ரசிகர்கள் பலமுறை அவரிடம் கேள்வி எழுப்பி இருந்தனர். எல்லாவற்றுக்கும் தனது கணவரின் சப்போர்ட் தான் காரணம் என்றும் ஃபரீனா கூறி இருந்தார். இந்நிலையில் தற்போது முறையான உடற்பயிற்சி மூலம் ஃபரீனா உடல் எடையையும் குறைத்து விட்டார். சீரியலில் பழைய வெண்பா போல் செம்ம ஸ்லிம்மாக இருக்கிறார். இந்த ரகசியத்தை பற்றி ரசிகர்கள் பலரும் இன்ஸ்டாவில் கேட்டு வருகின்றனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by farina azad (@farina_azad_official)






    இந்நிலையில் ஃபரீனா,  ரசிகர்களுக்கு மற்றொரு ஆச்சரியத்தையும் தந்துள்ளார். ஆற்று பாறையில் செம்ம டான்ஸ் ஆடி அந்த ரீல்ஸ் வீடியோவை  இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் ”எப்படி இவ்வளவு ஆக்டிவாக இருக்கிறீர்கள், உங்களை பார்த்தால்  குழந்தைக்கு அம்மா போலவே தெரியவில்லை பெண்களுக்கு சூப்பரான இன்ஸ்ப்ரேஷன் நீங்கள்” என்று  பாசிடிவ் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். உண்மை தான் , சில பெண்கள் குழந்தை பிறந்த பின்பு தங்களது உடல் நலம், அழகு நலம் எதையும் கவனித்துக் கொள்ள மாட்டார்கள் ஆனால் ஃபரீனா எல்லாவற்றையும் அழகாக பேலன்ஸ் செய்து தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றிலும் கணவருடன் கலக்கி வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி