Home /News /entertainment /

கடைசியில் இதுதான் உங்க ட்விஸ்டா? கையெடுத்து கும்பிட்ட கண்ணம்மா!

கடைசியில் இதுதான் உங்க ட்விஸ்டா? கையெடுத்து கும்பிட்ட கண்ணம்மா!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

கண்ணம்மாவை பார்த்து பாரதி, "ஆமாம் நான் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டேன் என்று ஒத்துக்கோ, நான் எல்லாவற்றையும் மறந்து நான் உன்னுடன் சந்தோஷமாக வாழ்கிறேன்" என்று கூறுகிறார்.

    கடந்த பல மாதங்களாக "சந்தேகம்" என்கிற ஒரே ஒரு விஷயத்தை வைத்து சீரியலை ஓட்டிக் கொண்டு இருந்த போதிலும் பாரதி கண்ணம்மா நாடகத்தின் ரசிகர் பட்டாளம் குறைந்த பாடில்லை. சரி, ஆரம்பம் முதலே நடித்து வரும் கதாநாயகியை மாற்றியதால் பாரதி கண்ணம்மா சீரியலின் மவுசு ரசிகர் பட்டாளம் மத்தியில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. "நீங்க எப்படி, என்னத்த எடுத்து வச்சாலும் நாங்க விடாம பார்ப்போம்" என்கிற அளவிற்கு மக்கள் தொடர்ந்து இந்த நாடகத்திற்கு ஆதரவு அளித்த வண்ணம் உள்ளனர்.

    ஒரு கட்டத்தில் பாரதியும் கண்ணம்மாவும் நெருக்கமாக, சந்தேகம் என்கிற கான்செப்ட்டே காணாமல் போக, ஆஹா! கதை போகும் போக்கை பார்த்தால் சீரியல் முடியப்போகிறதோ என்கிற எண்ணம் மக்கள் மனதில் எழுந்தது. அந்த எண்ணத்தில் ஒரு லாரி மண்ணை அள்ளிக்கொட்டும் விதமாக அடுத்தடுத்த எபிசோட்கள் இருக்கும். அந்த நேரத்தில் "இது எங்க முடிய போகுது" என்கிற சலிப்பும் தட்டும்.

    பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர் இதை ஒரு ஸ்டைலாகவே வைத்து இருக்கிறார். அதை ஸ்டைல் என்று அவர் வேண்டுமானால் நினைக்கலாம். ஆனால் மக்கள் அதை "அரைத்த மாவையே அரைப்பது" என்று கூறுகிறார்கள். அதாவது பாரதி கண்ணம்மா நாடகமானது ஒரு கட்டத்தில் சுவாரசியமாக நடந்து முடிந்த அதே பழைய கான்செப்டை மீண்டும் மீண்டும் கொண்டு வருகிறது. இந்த போக்கு மக்களுக்கு சற்று வெறுப்பை தருகிறது.

    இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கடந்த சில நாட்களாக புரமோ கிளிப்புகளில் (மட்டும்) வித்தியாசம் காட்டிய இயக்குனர், கதையில் அறைத்த மாவையே அறைத்துக் கொண்டிருக்கிறார். "அடடா.. இன்னைக்கு புரோமோவே இப்படி இருக்குன்னா எபிசோட் எப்படி இருக்கும்" என்கிற ஆர்வத்தை தூண்டுகிறார்; ஆனால் எபிசோடை பார்த்தால் அதே மாவு!

    அப்படியாக கண்ணம்மாவை பார்த்து பாரதி, "ஆமாம் நான் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டேன் என்று ஒத்துக்கோ, நான் எல்லாவற்றையும் மறந்து நான் உன்னுடன் சந்தோஷமாக வாழ்கிறேன்" என்று கூறுகிறார். கதையே இப்படி கொண்டு போக நினைத்து விட்டால், எதற்காக விவாகரத்து பேச்சு? எதற்காக நீதிமன்ற காட்சிகள்? எதற்காக ஒரே வீட்டில் ஒன்றாக வாழும் எபிசோட்கள்? எதற்காக ஒருவரை ஒருவர் பார்த்து புரிந்து கொள்வது போல சீன்கள்? எல்லாவற்றை விடவும் எதற்காக அம்மன் கோவிலில் பொங்கல் எல்லாம் விட்டீர்கள்?

    இதையும் படிங்க.. ரோஜா சீரியல் நடிகையின் தாய் பாசம்

    ஒருவேளை மற்ற சீரியல்களில் குடும்பம் குடும்பமாக பொங்கல் விடும் அதே காட்சியை படமாக்க விரும்பாத இயக்குனர், வித்தியாசமாக இருக்கட்டுமே என்கிற பேர்வழியில் நீதி காத்த அம்மன் கோவிலில் பொங்கல் விட்டாரோ? ஒவ்வொரு முறையும் கண்ணம்மா பக்கம் நீதி இருக்கும், நியாயம் இருக்கும், பாரதியின் மொத்த குடும்பமும் இருப்பார்கள். ஆனால் பாரதியோ சற்றும் சளைக்காமல் "துரோகம்" என்று கூறிவிட்டு இடத்தை காலி செய்து விடுவார் அல்லது எதுவும் பேசாமல் எஸ்கேப் ஆகிவிட்டு, தனியாக அமர்ந்து மனதிற்குள் பேசிக்கொண்டு இருப்பார்.

    இதையும் படிங்க.. கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..

    இயக்குனர் சார்? என்னங்க சார் இதெல்லாம்? பாரதி சொன்ன டயலாக்கை கேட்கும் நமக்கே கடுப்பு ஆகுதே, கண்ணம்மா சும்மா இருப்பாரா? அதை கேட்ட அவரது குடும்பத்தார் சும்மா இருப்பார்களா? செம்ம ஷாக்கில் மூழ்குகிறார்கள்; மறுகையில் கண்ணம்மா எதுவும் பேசாமல் கை எடுத்து கும்பிட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி