Home /News /entertainment /

வெண்பா துரோகியா? ஒரே நேரத்தில் பாரதிக்கு எத்தனை அதிர்ச்சியை சொல்வீங்க! - சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா தொடர்

வெண்பா துரோகியா? ஒரே நேரத்தில் பாரதிக்கு எத்தனை அதிர்ச்சியை சொல்வீங்க! - சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா தொடர்

கண்ணம்மா சீரியல்

கண்ணம்மா சீரியல்

பாரதியிடம், வெண்பா பற்றி எல்லா விஷயத்தையும் அகில் மற்றும் அஞ்சலி போட்டு உடைக்கின்றனர்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட், பாரதிக்கு வெண்பா பற்றிய உண்மை தெரிய வருவது தான்.

    பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினியின் விலகலுக்கு பின்பு சீரியலை பார்க்க ரசிகர்களின் ஆர்வம் குறைந்ததுள்ளது. இதன் தாக்கம் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் தெரிந்தது. புது கண்ணம்மாவாக வினுஷா நடித்து வரும் நிலையில் பழைய கண்ணம்மாவை பயங்கரமாக மிஸ் செய்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சீரியலை சூடுபிடிக்கும் கதைக்களத்தில் நகர்த்த சீரியல் குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி மீண்டும் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ கோர்டு 6 மாதம் அவகாசம் வழங்கியுள்ள நிலையில் இதற்கு இருவரும் சம்மதித்துள்ளனர். இதனால் வரும் வாரங்களில் கண்ணம்மா வீட்டில் பாரதி இருக்கும் காட்சிகள் ஒளிப்பரப்பாகவுள்ளன.

    மனவருத்தம் காரணமாக பிரிந்து இருக்கும் பாரதியும், கண்ணாம்மாவும் மீண்டும் சேர்ந்து பயணிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது  ரசிகர்களை நிச்சயம் கவரும் என இயக்குநர் கணிப்பாக உள்ளது. அதே போல் வெண்பா பற்றி பாரதிக்கு எல்லா உண்மைகளும் தெரிய வருவது போலவும் தற்போது புரமோ வெளியாகியுள்ளது. அந்த புரமோவில் பாரதியிடம், வெண்பா பற்றி எல்லா விஷயத்தையும் அகில் மற்றும் அஞ்சலி போட்டு உடைக்கின்றனர்.

    இத்தனை நாட்களாக வெண்பா ஆடிய ஆட்டத்துக்கு முடிவு கட்டுவது போல் மொத்த உண்மையையும் அஞ்சலி சொல்கிறார். தப்பான மாத்திரை கொடுத்து கொலை செய்ய நினைத்தது, மொத்த குடும்பத்திடமும் நாடகம் ஆடியது, பாரதி கொடுத்ததாக சொல்லி தப்பான மாத்திரையை தந்தது என வெண்பா செய்ததை கோபத்துடன் பாரதியிடம் சொல்கிறார் அஞ்சலி.



    இதை தாங்க முடியாமல் பாரதி அதிர்ச்சியில் உறைகிறான். வெண்பா துரோகி, ஏமாற்றுபவள், மோசமானவள் என அகிலன் கோபத்தில் கத்த பாரதி பதில் இல்லாமல் நிற்கிறார். இந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகவுள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி