ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் சீரியலுக்கு வரும் கண்ணம்மா ரோஷினி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!

மீண்டும் சீரியலுக்கு வரும் கண்ணம்மா ரோஷினி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!

கண்ணம்மா ரோஷினி

கண்ணம்மா ரோஷினி

ஜீ தமிழில் கூடிய விரைவில் தொடங்கவுள்ள சீரியலில் ரோஷினி ஹரிப்ரியன் லீட் ரோலில் நடிக்கிறார் என்று தகவல்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் புகழடைந்த ரோஷினி ஹரிப்ரியன் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

  பாரதி கண்ணம்மா சீரியல் முன்னாள் ஹீரோயின் ரோஷினி ஹரிப்ரியன் சீரியலில் இருந்து விலகிய பின்பு அவருக்கு ஃபேன்ஸ் கூட்டம் குறைந்த பாடில்லை. கண்ணம்மாவாக இல்லத்தரசிகளின் இதயத்தில் இடம்பெற்ற ரோஷினி திடீரென்று சீரியலில் இருந்தும் விலகியதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால் இன்று வரை அவரின் விலகலுக்கு உண்மையான கராணம் என்ன ? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சீரியலில் இருந்து விலகியதற்கு தனது ரசிகர்களிடம் ரோஷினி மன்னிப்பு கோரி இருந்தார்.

  கயல் சீரியல் நடிகைக்கு வளைகாப்பு.. சீரியலில் இருந்து விலகல்?

  பின்பு அவரை குக் வித்  கோமாளி சீசன் 3ல் பார்க்க முடிந்தது. அதே நேரம் பாரதி கண்ணம்மா சீரியல் டி.ஆர்.பியில் அடி வாங்கியது. அதற்கு முக்கியமான காரணம் ரோஷினியின் விலகல் தான் எனவும் கூறப்பட்டது. இப்போது அவருக்கு பதில் வினுஷா அந்த ரோலில் நடித்து வருகிறார். ரோஷினி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்வார் அவரை கூடிய விரைவில் படங்களில் பார்க்கலாம் எனறு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் தற்போது வரை அதுப்பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.
   
  View this post on Instagram

   

  A post shared by Kabooki MUA (@kabooki_mua)  இந்நிலையில் தற்போது ரோஷினி குறித்த சுடச்சுட தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது மீண்டும் சின்னத்திரையில் ரோஷினி என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. ஜீ தமிழில் கூடிய விரைவில் தொடங்கவுள்ள சீரியலில் ரோஷினி ஹரிப்ரியன் லீட் ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதே நேரம் இந்த தகவலை ரோஷினி  தரப்பு உறுதி செய்யவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv, Zee tamil