பாரதி கண்ணம்மா சீரியல் முன்னாள் ஹீரோயின் ரோஷினி ஹரிப்ரியன் வாழ்க்கையில் அப்படி என்ன தான் பிரச்சனை என கேட்க வைக்கிறது அவரின் பேச்சுகள். மிகப் பெரிய மன உளைச்சலில் இருந்ததாக குக் வித் கோமாளியில் கண்ணீருடன் ரோஷினி பதிவு செய்து இருந்தது அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஒரு காலத்தில் சின்னத்திரையில் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருந்த சீரியல் தான் ‘பாரதி கண்ணம்மா’. இந்த தொடரில் கண்ணம்மாவாக ரோஷினி நடித்தார். இவருக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருந்தது. தற்போதும் இருக்கிறது. கண்ணம்மாவாக இல்லத்தரசிகளின் இதயத்தில் இடம்பெற்றவர் திடீரென்று சீரியலில் இருந்து விலகினார். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால் இன்று வரை அவரின் விலகலுக்கு உண்மையான கராணம் என்ன ? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சீரியலில் இருந்து விலகியதற்கு தனது ரசிகர்களிடம் ரோஷினி மன்னிப்பு கோரி இருந்தார்.
குக் வித் கோமாளி செட்டில் ரித்திகா செய்த வேலை... பாதியில் போன அம்மு அபிராமி!
இவரின் விலகலுக்கு பின்பு சீரியல் டி.ஆர்.பி அடி வாங்கியது. இப்போது அவருக்கு பதில் வினுஷா அந்த ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசன் தொடங்க அதில் என்ட்ரி கொடுத்தார் ரோஷினி. அவரின் ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம், வெள்ளித்திரையில் அவரை காண ஆவலாக இருந்தவர்கள் மீண்டும் சின்னத்திரையில் அதுவும் ஹிட் ஷோவில் பார்த்ததும் குஷியாகினர்.
அப்படி போடு! பிக் பாஸ் பிரியங்கா சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வைரல் தகவல்
இந்நிலையில், பல கட்டங்களை கடந்து டாப் 6 போட்டியாளராக இருந்த கண்ணம்மா ரோஷினி சென்ற வாரம் எவிக்ட் ஆகினார். அவரின் எலிமினேஷன் ரவுண்டில் அவர் பேசியது ரசிகர்களை கண்கலங்க வைத்தது. எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் ரோஷினின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள். இதை எல்லாம் தாண்டி, மிகப் பெரிய மன உளைச்சலில் இருந்து மீண்டும் வந்து தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
பல சமயங்களில் நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு சென்ற பின்பு இதை நினைத்து அழுவாராம். கோமாளிகள், மற்ற போட்டியாளர்கள், நடுவர்களுடன் சகஜமாக பேசவே அவருக்கு நிறைய நாட்கள் ஆகியதாம். ஒரு பெரிய முடிவை எடுத்துவிட்டு மிகவும் டவுணாக இருந்தவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மீண்டும் மேலே கொண்டு வந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்ணம்மாவின் இந்த பதிவின் மூலம் அவர் மன உளைச்சலில் இருந்தது, அதில் இருந்து மீண்டு வந்திருப்பது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.
இந்த நிகழ்வுகள் கடந்த வாரம் நடந்தாலும் இன்று வரை இணையத்தில் ரசிகர்களால் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுக் குறித்த வீடியோவையும் ரசிகர்கள் தேடி தேடி பார்த்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.