விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மெகா ஹிட் சீரியல்களில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. இந்த சீரியல் ஹிட்டானதற்கு காரணம் இதன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான். கண்ணம்மா கர்ப்பமானதிலிருந்து தொடங்கிய டிஎன்ஏ டெஸ்ட் பிரச்சனை தற்போது குழந்தைக்கு யார் அப்பா என்ற குழந்தை வளர்ந்து கேள்வி கேட்கும் வரை தீர்வு காணாமல் இருக்கிறது. கண்ணம்மா தன்னுடைய பிறந்தநாள் அன்று தன் மகள் லட்சுமியின் அப்பா யார் என்று கூறப்போகிறார் என்ற புரமோ தற்போது வெளியாகி உள்ளது.
கண்ணம்மாவின் பிறந்தநாள் அன்று தன்னுடைய மகள் லட்சுமிக்கு, லட்சுமியின் அப்பா யார் என்று தன்னுடைய மகளுக்கு தெரிவிப்பதாக கூறியிருந்தார். பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தையை பாரதியின் அம்மா வளர்த்து வருகிறார். மற்றொரு குழந்தை கண்ணம்மா வளர்க்கிறார். இரண்டு பெண்களும், இரட்டையர்கள் என்று அவர்கள் இருவர் மற்றும் பாரதிக்கு மட்டுமே தெரியாது மற்ற அனைவருக்குமே இந்த உண்மை தெரியும். இரண்டு பெண்களும் இரட்டையர்கள் என்று அறியாமலே நெருக்கமாக பழகி வருகிறார்கள். இவர்கள் ஒன்றாகப் பழகுவது வழக்கம் போல பாரதிக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், குழந்தைகள் பழகுவதைத் தடுக்கவும் முடியவில்லை. தற்போது, கண்ணம்மாவின் பிறந்தநாள் வரவிருக்கிறது.
இதையும் படிங்க.. மீண்டும் ரசிகர்களை குழப்பும் அமீர் -பாவ்னி.. அந்த ஃபோட்டோவுக்கு பின்னாடி ஒரு கதையே இருக்கு!
பாரதியிடம் வளரும் குழந்தை, தன்னுடைய சொந்த அம்மாவை சமையல் அம்மா என்று அழைப்பது வழக்கம். இப்போது வெளியான புரமோவில் சமையல் அம்மாவுக்கு பிறந்தநாள், அதற்கு லக்ஷ்மி அழைத்து இருப்பதாகவும், லக்ஷ்மியின் தந்தை யார் என்று சமையல் அம்மா கூற இருப்பதாகவும் பாரதியின் பெண் கூறுகிறார். அதைக் கேட்டு பாரதி அதிர்ச்சிக்குள்ளாகும் காட்சிகள் உள்ளன.
ஒவ்வொரு முறையும்
டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பாரதி தான் குழந்தைகளின் அப்பா என்பதை எப்படியாவது நிரூபிக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கையில் ஏதோ ஒரு குழப்பம் ஏற்பட்டு, டெஸ்ட் எடுக்காமல் முடியும் அல்லது மறுபடி மறுபடி டிஎன்யே டெஸ்ட் ரிசல்ட் மாற்றி வைக்கப்படும். இதை ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர். கடந்த வார எபிசோடில் தன்னுடைய மகளுக்காக சில நாட்களுக்கு முன் அப்பா யாரென்று சொல்வதாகக் கூறியிருந்தார் கண்ணம்மா.
யோசித்து பார்க்கும் போது குழந்தைகளின்
அப்பா பாரதி தான் என்ற உண்மை தெரிய வந்தால் சீரியலில் வேறு கதைக்களம் இருக்காது, அத்துடன் கதை முடிந்துவிடும். டிஎன்ஏ டெஸ்ட் என்ற ஒரே ஒரு விஷயத்தை வைத்து இன்னும் எத்தனை மாதங்களுக்கு சீரியலை இழுவையாக இழுக்கப் போகிறார்கள் என்று ஏற்கனவே பலமுறை நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளியுள்ளனர்.
இந்த முறையும், கண்ணம்மா கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமி அப்பா பாரதி தான் என்ற உண்மையை கண்ணம்மா தனது பிறந்த நாள் பரிசாக தன் குழந்தைக்கு வழங்குவாரா?
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.