Home /News /entertainment /

கண்ணம்மா மீது செம்ம கோபத்தில் பாரதி.. கடைசியில் நடந்த கதையே வேற !

கண்ணம்மா மீது செம்ம கோபத்தில் பாரதி.. கடைசியில் நடந்த கதையே வேற !

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

கண்ணம்மா விஷயத்தில் மட்டும் இந்த பாரதியை பார்ப்பது ரொம்ப கஷ்டம்

    பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா மீது டாக்டர் பாரதி பயங்கர கோபத்தில் இருக்க, கடைசி நேரத்தில் ஒரு ட்விஸ்ட் நடக்கிறது. என்னது அது வாங்க பார்க்கலாம்.

    பாரதி கண்ணம்மா சீரியலில் சமையல் அம்மாவாக சுற்றிவந்த கண்ணம்மாவுக்கு இப்போது மருத்துவமனையில் வேலை. அதுவும் பாரதி டாக்டராக வேலைக்கு சேர்ந்துள்ள விக்ரம் ஹாஸ்பிட்டலில் தான். இந்த விஷயம், வேலைக்கு சேரும் முதல் நாலே பாரதிக்கு தெரிந்து விடுகிறது. இதற்கு காரணம் வழக்கம் போல் சவுந்தர்யா தான் என நினைத்து கோபம் கொள்கிறார் பாரதி. அதுமட்டுமில்லை மொத்த குடும்பமும் பிளான் செய்து கண்ணம்மாவை இங்கு வேலைக்கு சேர்த்து விட்டிருப்பதாக பாரதி நினைத்து சண்டை போடுகிறார். இதை கண்ணம்மாவும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்.ஆனால் கண்ணம்மாவுக்கு இங்கு எப்படி வேலை கிடைத்தது என்று தெரியவில்லை.

    சத்யாவா இப்படி ஒரு காரியத்தை செய்தார்? ஷாக்கில் வருண்!

    இப்படி இருக்கையில், கண்ணம்மா இருக்கும் இடத்தில் நான் வேலை செய்ய மாட்டேன் என்கிறார் பாரதி. இதை சொல்லி சவுந்தர்யாவிடமும் வேணுவிடம் சண்டை போடுகிறார். முதல் நாளே வேலையை ராஜினாமா செய்து விடுவேன் என்று குண்டு தூக்கி போட, கடைசியில் நடந்த கதையே வேற. பாரதியை பார்க்க அமைச்சர் அங்கு வர, அவரை பார்த்ததும் பாரதியால் இந்த வாய்ப்பை மறுக்க முடியவில்லை, கண்ணம்மா இருந்தால் எனக்கு என்ன? என்று அவரே மனசை ஆறுதல் செய்துக் கொண்டு இந்த ஆஸ்பிட்டலை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்கிறார். பாரதியின் இந்த முடிவால் சவுந்தர்யா மேடம் பயங்கர ஹாப்பி.

    உழைப்புக்கு கிடைத்த வெற்றி… பிரபல விஜய்டிவி சீரியல் நடிகருக்கு தெலுங்கில் கிடைத்த வாய்ப்பு!

    கதையில் அடுத்த சுவாரசியம் என்னவென்றால் அது வெண்பா அம்மாவான ஷர்மிளாவின் எண்ட்ரி தான். இப்போ வெண்பாவோட அம்மாவுக்கு பாரதிக்கு வெண்பா மேல லவ் இல்லனு தெரிஞ்சுடுச்சு. அதனால் வெண்பாவுக்கு வேற மாப்பிள்ளை பார்க்க போறதா சொல்றாங்க அதை கேட்ட வெண்பா பாரதியை போய் சந்தித்தார். ஆரம்பத்தில் கோபப்பட்ட பாரதி அடுத்த வெண்பாவின் நடிப்பை பார்த்து மனம் இறங்கி விடுகிறார்.வெண்பா ஒரு பொய் சொன்னா போதும் உடனே நம்பி விடுகிறார்.ஆனால் கண்ணம்மா விஷயத்தில் மட்டும் இந்த பாரதியை பார்ப்பது ரொம்ப கஷ்டம். இவ்வளவு நாளா ஸ்கூலில் அரங்கேறி வந்த கதை இனிமேல் ஆஸ்பிட்டலில் அரங்கேற போகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி