Home /News /entertainment /

என்னய்யா நடக்குது? பாரதி கண்ணம்மா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ!

என்னய்யா நடக்குது? பாரதி கண்ணம்மா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் பார்த்து எத்தனை குடும்பம் சண்டை போட்டு, அழுது கொண்டு இருக்கிறது. இங்க வந்து ‘தில்லானா, தில்லானா’ என டான்ஸ் ஆடுறீங்க, பாருங்க மக்களே

    விஜய் டிவியின் பாரதி கண்ணம்மாவில் நடிக்கும் பாரதி, கண்ணம்மா - வெண்பா மூவரும் சேர்ந்து டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சீரியலிலேயே பாரதி கண்ணம்மா தான் நெம்பர் ஒன் டிஆர்பியுடன் பட்டையைக் கிளப்பி வருகிறது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் பேவரைட் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு டப் போட்டியாளராக பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து வருகிறது.

    இந்த சீரியலில் இதுவரை கண்ணமாகவாக நடித்து வந்தவர் தான் ‘ரோஷினி ஹரிப்ரியன்’. இவர் சீரியலில் இருந்து விலகுவதாக  அறிவித்தார். இந்த செய்தி பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சீரியல் குழு ரோஷினியைப் போலவே இருக்கும் வினுஷா தேவியை புதிய கண்ணம்மாவாக களமிறக்கியது. அவரும் சில நாட்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

    12 வருடங்களுக்கு முன்பு காரைக்குடி மாடியில்… சன் டிவி நாதஸ்வரம் சீரியல் நடிகையின் நெகிழ்ச்சி பதிவு!

    பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு உள்ள ஒட்டுமொத்த ரசிகர்கள் பட்டாளமும் திட்டித்தீர்க்கும் அளவிற்கு வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் பரீனா நடிப்பில் வெளுத்து வாங்கி வருகிறார். பாரதி - கண்ணம்மாவை நிரந்தரமாக பிரித்து வைக்க தன்னால் ஆன எல்லா சித்து வேலைகளையும் செய்து ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருகிறார். பாரதியும், கண்ணம்மாவும் இணைந்து விடுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தால், வார வாரம் எதையாவது சொல்லி கதையை நீட்டித்து விடுகிறார்கள். இத்தனை நாட்களாக இருவரையும் இணைக்க சவுந்தர்யா படாதபாடுபட்டார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Vijay Television (@vijaytelevision)






    இப்போது பாரதியையும், கண்ணம்மாவையும் சேர்க்கும் முயற்சியில் அவர்களது இரட்டை குழந்தைகள் களமிறங்கியுள்ளது போல் கதை நகர்ந்து வருகிறது. எப்ப சார் கதையை முடிப்பீங்க என கேட்கும் அளவிற்கு ஸ்டோரி போய்க்கொண்டே இருப்பதால், ரசிகர்களுக்கு போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் டாப் ரேட்டிங்கில் இருந்த பாரதி கண்ணம்மா சீரியலின் டிஆர்பி-யும் மளமளவென சரிந்துவிட்டது. டாப் 5 இடத்தை கூட பிடிக்க முடியாத அளவிற்கு சீரியல் டிஆர்பி கீழே இறங்கிவிட்டது.

    இதன் பிறகாவது சீரியலை முடிப்பார்களா? என ரசிகர்கள் காத்திருக்கும் நேரத்தில்  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Start Music - Premier League என்ற நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா மற்றும் தமிழும் சரஸ்வதியும் சீரியலைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

    விஜய்யின் பீஸ்ட் பாடலை கலாய்த்த பிக் பாஸ் பிரபலம்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. என்ன செய்தார் தெரியுமா?

    காமெடி கேம் ஷோவான இதில், முத்து படத்தில் இடம் பெற்ற ‘தில்லானா, தில்லானா’ பாடலுக்கு பாரதி - கண்ணம்மா - வெண்பா மூவரும் ஒன்றாக நடனமாடியுள்ளனர்.

    அதற்கு ஆங்கர் மா.கா.பா. பாரதி கண்ணம்மா சீரியல் பார்த்து எத்தனை குடும்பம் சண்டை போட்டு, அழுது கொண்டு இருக்கிறது. இங்க வந்து ‘தில்லானா, தில்லானா’ என டான்ஸ் ஆடுறீங்க, பாருங்க மக்களே எல்லாம் நடிப்பு என கலாய்த்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி