• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கண்ணம்மாவிடம் தோற்ற பாரதி.. அப்ப 6 மாசத்துல சீரியல் முடிஞ்சிடுமா?

கண்ணம்மாவிடம் தோற்ற பாரதி.. அப்ப 6 மாசத்துல சீரியல் முடிஞ்சிடுமா?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

6 மாசத்துக்கு பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்குகிறார் நீதிபதி.

  • Share this:
    கண்ணம்மாவின் விவாகரத்து வழக்கில் தோற்ற பாரதிக்கு கோர்டு 6 மாசத்துக்கு சேர்ந்து வாழும்படி தண்டனையும் தந்துள்ளது.

    சீரியல் பிரியர்களின் லிஸ்டில் முதலில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி - கண்ணம்மாவின் விவாகரத்து எபிசோடுகள் தான் ஒளிப்பரப்பாகி வருகிறது. பழைய கண்ணம்மா ரோஷினி சீரியலில் இருந்து விலகிய காரணத்தினால் வினுஷா புதிய கண்ணம்மாவாக நடித்து வருகிறார். இவரின் அறிமுகம் இந்த வாரம் முதல் நாளே தொடங்கியது. பரபரப்பாக இந்த கோர்டு சீனில் பாரதியும் கண்ணம்மாவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். இனிமேல் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ முடியாது என முடிவு எடுத்த பின்பு தான் பாரதி விவாகரத்து கேட்டு முறையிடுகிறார்.

    ஆனால் கோர்டில் நீதிபதி கேட்கும் எந்த கேள்விக்கும் பாரதியால் சரியான பதில் தரமுடியவில்லை. விவாகரத்து கேட்கும் அளவுக்கு சரியான காரணம் இல்லை என்று நீதிபதி சொல்ல, பாரதி தரப்பு வழக்கறிஞர் கண்ணம்மா பற்றி தப்பாக கோர்டில் சொல்லும்படி வற்புறுத்துகிறார். அப்படி சொன்னால் உடனே விவாகரத்து கிடைத்துவிடும் என்கிறார். ஆனால் அதே நேரம் பாரதி லட்சுமி நிலையை நினைத்து சற்று யோசிக்கிறார்.

    கண்ணம்மா பற்றி தப்பா பேசினால் லட்சுமியின் எதிர்காலம் என்னவாகும்?ஸ்கூல் படிக்கும் லட்சுமியின் மனசை இந்த விஷயம் எப்படி பாதிக்கும் என யோசித்து கண்ணம்மாவை பற்றி எதையுமே சொல்லாமல், குழந்தை பற்றி எதுவும் பேசாமல் நிற்கிறார். இதனால் கண்ணம்மாவுக்கு சாதகமாக வழக்கு மாறுகிறது. இருதரப்பினர் கருத்துக்களையும் கேட்ட நீதிபதி பாரதியின் வழக்கை தள்ளுபடி செய்கிறார்.



    அதுமட்டுமில்லை அடுத்த 6 மாசத்துக்கு பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்குகிறார். இதுக் குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. அப்படியென்றால் இன்னும் 6 மாசம் தான் சீரியலா? 6 மாசத்தில் கண்ணம்மா பற்றி எல்லா உண்மைகளையும் புரிந்து கொண்டு பாரதி சேர்ந்து விடுவாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: