முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எல்லாத்துக்கும் நீதான் காரணம்.. கண்ணம்மாவை திட்டி தீர்க்கும் பாரதி!

எல்லாத்துக்கும் நீதான் காரணம்.. கண்ணம்மாவை திட்டி தீர்க்கும் பாரதி!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

கண்ணம்மா அவர்களுடன் நெருக்கமாக பழகுவது பாரதிக்கு பிடிக்கவில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில், ஆஸ்பிட்டலில் இருக்கும் ஜானகி அம்மா - ராமன் காணாமல் போனதற்கு கண்ணம்மா தான் காரணம் என திட்டி தீர்க்கிறார் டாக்டர் பாரதி.

விக்ரமின் ஆஸ்பிட்டலில் இருக்கும் ஜானகி அம்மாவுக்கு இதயத்தில் ஓட்டை. இந்த விஷயம் அவருக்கு தெரியும். ஆனால் அவரின் கணவர் ராமனுக்கு இது தெரியாது. ஆப்ரேஷன் செய்தாலும் ஜானகி அம்மா பிழைக்க பாதிக்கு பாதி வாய்ப்பு தான் இருப்பதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். ஆனாலும் ஜானகி அம்மாவை காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறார் பாரதி.  இதனால் ஜானகி அம்மா இதய அறுவை சிகிச்சைக்காக அட்மிட் ஆகியுள்ளார். அவர்களுடன் கண்ணம்மா நெருக்கமாக பழகுவது பாரதிக்கு பிடிக்கவில்லை. அவர்களை கண்ணம்மா சொந்த மகள் போல் பார்த்து கொள்கிறார்.

பேருக்கு தான் வில்லி.. பாரதி கண்ணம்மாவில் மீண்டும் ஏமாறும் வெண்பா!

இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஜானகி அம்மாவும் ராமனும் திடீரென்று ஆஸ்பிட்டலில் இருந்து காணாமல் போகிறார்கள். அட்மின் ஆபீசரான கண்ணம்மா தான் அவர்களை வாக்கிங் செல்ல அனுமதித்து இருக்கிறார். ஆனால் ரொம்ப  நேரம் ஆகியும் அவர்கள் வராததால் பாரதி  கோபத்தில் கண்ணம்மாவை பயங்கரமாக  திட்டுகிறார். விஷயம் தெரிந்து ஓடி வரும் விக்ரம், பாரதியை சமாதானம் செய்கிறார். ஆனாலும் பாரதியின் கோபம் குறைவதாக இல்லை.

அண்ணனுக்கு முடியாத போது, இது இப்ப தேவையா? பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவுக்கு வந்த சோதனை!

அதற்குள் முதியவர்கள் தற்கொலை செய்து கொண்ட செய்தி டிவியில் ஒளிப்பரப்பாக, அது இவர்களாக இருக்கும் என பாரதி நினைக்கிறார். ஆனால் கண்ணம்மா அப்படி இருக்காது என உறுதியாக கூறுகிறார். கடைசியில் ஜானகி அம்மா, அவரின் கணவர் ராமனிடம் தனக்கு இருக்கும் பிரச்சனையை பற்றி கூறி  அவருக்கு மன தைரியத்தை வர வழைத்து ஆறுதல் சொல்லிவிட்டு ஆஸ்பிட்டல் திரும்புகிறார். அவர்களை பார்த்த பின்பு தான் பாரதிக்கு உயிரே வருகிறது. இதோடு இன்றைய எபிசோடு முடிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv