• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாரதி கண்ணம்மா சீரியலில் இன்னும் எத்தனை நாட்கள் ரோஷினியை பார்க்கலாம்?

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்னும் எத்தனை நாட்கள் ரோஷினியை பார்க்கலாம்?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

கண்ணம்மாவின் விலகலால் கண்டிப்பாக சீரியல் டி.ஆர்.பியில் அடிவாங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியுள்ள ரோஷினியை இன்னும் எத்தனை நாட்கள் சீரியலில் பார்க்க முடியும் என ரசிகர்களின் கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

    தமிழ் சீரியல்களில் தற்போதைய டிரெண்டில் படு ஹிட் சீரியல் வரிசையில் முதலிடத்தில் இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரயலில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை ரோஷினி. மாடலிங் துறையில் இருந்த இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சீரியல் வாய்ப்பு வந்தது. பாரதி கண்ணம்மா சீரியல் தான் இவருக்கு முதல் சீரியல். தன்னுடைய சமத்தான நடிப்பால், ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுவிட்டார். ரோஷினிக்கு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும், ஆயிரக்கணக்கான பாலோயர்ஸ் இருக்கின்றனர். அவர்களுக்காக அவ்வப்போது சேட்டை வீடியோக்களை ரோஷினி பதிவிடுவது வழக்கம். சீரியலில் இருப்பது போலவே மிகவும் போல்டான பெண் தான் ரோஷினி, இவரின் பல ஃபோட்டோ ஷூட்கள் இணையத்தில் வைரலாகின. டஸ்கி ஸ்கீன் என்பதால் ஆரம்பத்தில் இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன, ஆனால் பாரதி கண்ணம்மா சீரியல் வாய்ப்பு இவரின் கருப்பழகால் தான் கிடைத்தது.

    இந்த சீரியல் தொடங்கி கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் சென்று விட்டன. தற்போது வரை டி.ஆர்.பியில் நல்ல இடத்தில் இந்த சீரியல் இருந்து வருகிறது. இப்போது கதைக்களம் டாப் ஸ்பீடில் போய்க் கொண்டிருக்கிறது. ஏனென்றால், இவ்வளவு நாட்களாக தனக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த கண்ணம்மாவுக்கு, இரண்டு குழந்தைகளை பெற்றது தெரிந்துவிட்டது. இன்னொரு மகள் ஹேமா என்ற உண்மையும் தெரிந்து விட்டது. ஹேமா மீது கண்ணம்மா எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அதிகமான அன்பும் பாரதிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது. இனிமேல் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையேயான காட்சிகள் சீரியலில் அதிகம் இடம்பெறும் என எதிர்பார்த்த நிலையில் சீரியலில் இருந்து திடீரென்று விலகினார் கண்ணம்மா. (ரோஷினி) இதனால் சீரியல் ரசிகர்கள் அனைவரும் பெரும் சோகத்தில் உள்ளனர். கண்ணம்மாவின் விலகலால் கண்டிப்பாக சீரியல் டி.ஆர்.பியில் அடிவாங்க வாய்ப்புள்ளது. காரணம், கண்ணம்மாவுக்காகவே இந்த சீரியலை பார்க்க தனி கூட்டம் உள்ளது.

    ஒருவேளை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரிந்தால் அதற்கு இவர்கள் தான் காரணம்!

    ரோஷினியின் இந்த திடீர் விலகலுக்கு நிறைய காரணங்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் இன்னும் எத்தனை நாட்கள் சீரியலில் கண்ணம்மாவாக ரோஷினியை பார்க்கலாம் என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சரியாக கடந்த 23 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ரோஷினி ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அன்றைய தினமே இனிமேல் ஷூட்டிங்குக்கு வர மாட்டேன் என்று தெரிவித்துவிட்டு சென்று இருக்கிறார். அப்படி இருக்கையில் இதுவரை இவர் நடித்த காட்சிகளை வைத்து இன்னும் 10 நாட்கள் மட்டுமே கண்ணம்மாவாக ரோஷினியை சீரியலில் பார்க்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள் வேறு ஒரு நடிகையை இனிமேல் இவர் என கண்ணம்மாவாக அறிமுகப்படுத்துவார்கள் என தெரிகிறது. எனவே, கண்ணம்மா ரசிகர்கள் இன்னும் 10 நாட்கள் மட்டுமே கண்ணம்மாவை (ரோஷினியை) சீரியல் பார்க்க முடியும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: