• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாரதிக்கு செக் மேல் செக் வைக்கும் கண்ணம்மா.. சீரியலில் இனிமே தான் மிகப் பெரிய ட்விஸ்டே இருக்கு!

பாரதிக்கு செக் மேல் செக் வைக்கும் கண்ணம்மா.. சீரியலில் இனிமே தான் மிகப் பெரிய ட்விஸ்டே இருக்கு!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

9 வருடங்களுக்கு பிறகு இப்போது விவாகரத்து கேட்க என்ன காரணம் என புலம்புகிறார் கண்ணம்மா.

  • Share this:
    கண்ணம்மாவிடம் டைவர்ஸ் கேட்கும் பாரதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செக் மேல் செக் வைக்கிறார் கண்ணம்மா. மொத்தத்தில் சீரியலில் அடுத்தடுத்த ட்விஸ்டுகள் அரங்கேறவுள்ளன.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மா கடந்த ஒரு வாரமாக ரசிகர்களுக்கு ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து வருகிறது. இந்த சீரியலின் ஆரம்பக்கட்டத்தில் பாரதி, கண்ணம்மாவை அவன் அம்மா சவுந்தர்யாவை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். அதனால் கண்ணம்மாவை பார்த்தாலே சவுந்தர்யா வெறுத்து ஒதுக்கினார். கொஞ்சம் கொஞ்சமாக சவுந்தர்யா மனதில் கண்ணம்மா இடம் பிடிக்க, கண்ணம்மா கர்ப்பம் ஆனதும் சவுந்தர்யா கண்ணம்மாவை முழுமையாக ஏற்றுக் கொண்டார். ஆனால் அப்போது பாரதி ,கண்ணம்மாவுக்கு எதிராக திரும்பி வீட்டை விட்டு துரத்தினார்.

    கண்ணம்மா வீட்டை விட்டு வெளியே அனுப்பிய பிறகு கண்ணம்மா 8 வருடங்களாக படாத கஷ்டமில்லை. அதே போல் தனது மருமகள் கண்ணம்மாவை தேடியும் சவுந்தர்யா பல இடங்களில் அலைந்தார். ஒருவழியாக கண்ணம்மாவை பார்த்ததும் அவருக்கு பல விதங்களில் உதவி செய்து வந்தார்.பாரதி, கண்ணம்மாவை வெறுத்தி ஒதுக்கினாலும் எப்போதுமே சவுந்தர்யா, கண்ணம்மா பக்கம் தான். இந்நிலையில், கண்ணம்மாவின் குழந்தை ஹேமா பிறந்த உடனே தூக்கி சென்று இத்தனை ஆண்டுகளாக வளர்த்து வந்த உண்மையை கண்ணாம்மாவிடம் சவுந்தர்யா சொன்ன நாளிலிருந்து பிரச்சனை பெரிதாக வெடிக்க தொடங்கி விட்டது.

    ஹேமா தான் உண்மையான மகள் என தெரிந்த பின்பு குழந்தையை கேட்டு கண்ணம்மா சவுந்தர்யாவிடம் பிரச்சனை செய்து வந்தார். ஆனால் பாரதி நேராக வந்து பேசிய நாளிலிருந்து இப்போதைக்கு ஹேமா பாரதியுடனே இருக்கட்டும் என சொல்லிவிட்டார். இதனால் சவுந்தர்யா மிகப் பெரிய பிரச்சனையில் இருந்து கொஞ்ச நாட்கள் நிம்மதியாக இருக்கிறார். ஆனால் அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. அதற்குள் பாரதி கண்ணம்மாவை விவாகரத்து செய்வதற்கு டைவர்ஸ் நோட்டீஸை அனுப்பிவிட்டார்.



    இதை தனது குடும்பத்தினரிடம் சொல்லி, யாரும் கண்ணம்மாவுக்கு சப்போர்ட் செய்யக்கூடாது என சத்தியம் வாங்குகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத கண்ணம்மா, 9 வருடங்களுக்கு பிறகு இப்போது விவாகரத்து கேட்க என்ன காரணம் என புலம்புகிறார். அதே சமயம் பாரதிக்கு தக்க பதிலடி கொடுக்க, விவாகரத்து கொடுக்க முடியாது எனவும், ஒருவேளை கண்டிபாக விவாகரத்து வேண்டுமென்றால் ஹேமாவை என்னிடம் நிரந்தரமாக அனுப்ப வேண்டும் என செக் வைக்கிறார். இதுக் குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: