Home /News /entertainment /

பாரதி கண்ணம்மாவில் பரபரப்பு திருப்பம்.. டாக்டர் பாரதி தான் அப்பா என்ற உண்மையை கண்டுப்பிடித்த லட்சுமி!

பாரதி கண்ணம்மாவில் பரபரப்பு திருப்பம்.. டாக்டர் பாரதி தான் அப்பா என்ற உண்மையை கண்டுப்பிடித்த லட்சுமி!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் அப்பாவை தனி ஆளாக நின்று கண்டுப்பிடிப்பேன் என சபதம் போட்ட லட்சுமி கடைசியில் அதில் ஜெயித்து விட்டார்.

    பாரதி கண்ணம்மா சீரியலில் இந்த வாரத்திற்கான புரமோ வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. ஆமாம் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக கண்ணம்மா மறைத்து வைத்த உண்மையை தனி குழந்தையாக நின்று லட்சுமி கண்டுப்பிடித்து விட்டாள்.

    ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தருணம் வந்து விட்டது. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பான எந்த திருப்பமும் இல்லாமல் சென்றுக் கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் அதிரடி திருப்பம் வரவுள்ளது. இதுக் குறித்த புரமோவை சீரியல் குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது , பாரதி கண்ணம்மா தொடர் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்து விட்டது. லட்சுமி எல்லா உண்மையையும் கண்டுப்பிடித்து விட்டாரள்

    ஏற்கெனவே இணையத்தில் உலா வந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிய வந்து விட்டது. அதாவது லட்சுமி கண்ணம்மாவின் ஆதார் கார்டை வைத்து பாரதி வீட்டை வந்து அடைகிறாள். அங்கே பாரதி, கண்ணம்மா, சவுந்தர்யா, அஞ்சலி என மொத்த குடும்பமும் பேசிக் கொண்டிருக்கும் அந்த பல ஆண்டு ரகசியத்தை கேட்டு விடுகிறாள்.

    விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

    கடைசியில் லட்சுமிக்கு பாரதி தான் அவரின் அப்பா என்ற உண்மை தெரிய வந்து விட்டது. கட்டாயம் இது சீரியல் ரசிகர்களுக்கு செம்ம ட்விஸ்ட் தான். இதற்கு முன்பு பாரதியும் கண்ணம்மாவும் சேர்வது போல் புரமோவை வெளியிட்டு இயக்குனர் ஷாக் தந்தார். ஆனால் கடைசியில் வழக்கம் போல டாக்டர் பாரதி, கண்ணம்மா மீது சந்தேகம் கொண்டு, தனது சந்தேகம் உண்மை தான் என்பதை ஒப்பு கொண்டால் ஏற்று கொள்வதாக கூறியதை தொடர்ந்து ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அதே போல் இந்த புது ட்விஸ்டும் சொதப்பி விடக்கூடாது என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    விஜய்யின் பீஸ்ட் பாடலை கலாய்த்த பிக் பாஸ் பிரபலம்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. என்ன செய்தார் தெரியுமா?

    கண்ணம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்த பிறகு, அப்பாவை தனி ஆளாக நின்று கண்டுப்பிடிப்பேன் என சபதம் போட்ட லட்சுமி கடைசியில் அதில் ஜெயித்து விட்டாள். கண்ணம்மாவின் கல்யாண புகைப்படம், ரேஷன் கார்டு ஆகியவற்றை ஒருபக்கம் தேடிக் கொண்டிருந்த லட்சுமிக்கு கண்ணம்மாவின் ஆதார்டு கார்டு கிடைக்க, அதில் இருக்கும் முகவரியை தேடி வந்தால்,  பெரும் அதிர்ச்சி. ஏனென்றால் அது இவ்வளவு நாளாக லட்சுமி டாக்டர் அங்கிள் என கூப்பிட்ட பாரதியின் வீடு. வீட்டுக்குள்ளே லட்சுமி செல்ல, அங்கு வழக்கம் போல் பாரதி, சவுந்தர்யா, அஞ்சலி, அகிலன், வேணு ஆகியோர் சண்டை போட்டு கொள்கின்றனர்.



    ஆனால் ட்விஸ்ட்டாக வீட்டுக்குள் கண்ணம்மாவும் இருக்க, கண்ணம்மா நீங்க தான் லட்சுமி அப்பா என சொல்ல, மொத்த உண்மையையும் லட்சுமி கேட்டு விடுகிறாள். புரமோவை பார்த்த ரசிகர்கள் எபிசோடுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி