சொந்த ஊர் திரும்பிய இளம் டிவி நடிகை சாலை விபத்தில் மரணம்

டிவி நடிகை மெபீனா மைக்கேல்

22 வயதுடைய இளம் நடிகை ஒருவர் சாலை விபத்தில் மரணமடைந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • Share this:
    கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பிரபலமானவர் மெபீனா மைக்கேல். 22 வயதாகும் இவர் கர்நாடகாவின் மடிக்கேரியிலிருந்து தனது சொந்த ஊருக்கு காரில் தனது நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அப்போது தேவிஹள்ளி பகுதியில் டிராக்டர் ஒன்று கார் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே விபத்தில் சிக்கியவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் மெபீனா மைக்கேலின் நண்பர்களுடன் காயத்துடன் உயிர் தப்பிய நிலையில் மெபீனா மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த பெல்லூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயதில் சாலை விபத்தில் மெபீனா மரணமடைந்திருப்பது குடும்பத்தார் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய மெபீனா, Pyaate Hudugir Halli Life Season 4 என்ற தொலைக்காட்சித் தொடரில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த சீசனை தொகுத்து வழங்கிய அகுல் பாலாஜி, தனது ட்விட்டர் பக்கத்தில் மெபீனாவின் மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.



    மேலும் படிக்க: லாக்டவுன் மன அழுத்தம் : இளம் டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sheik Hanifah
    First published: