விஷம் குடிப்பதை வீடியோ பதிவு செய்து டிவி நடிகை தற்கொலை

விஷம் குடிப்பதை வீடியோவாக பதிவு செய்துவிட்டு டிவி நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷம் குடிப்பதை வீடியோ பதிவு செய்து டிவி நடிகை தற்கொலை
மாதிரிப் படம்
  • Share this:
பெங்களூருவைச் சேர்ந்தவர் நடிகை சந்தனா. பல கன்னட சீரியல்களில் நடித்து வரும் இவர் தனது வீட்டில் விஷமருந்தி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நடிகை சந்தனா தற்கொலை செய்து கொள்வதை வீடியோவாக பதிவு செய்திருப்பது போலீசுக்கு கிடைத்துள்ளது. அதில் தான் காதலித்து வந்த தினேஷ் என்பவர் தான் தற்கொலைக்கு காரணம் என்று நடிகை சந்தனா கூறியுள்ளார்.
நடிகை சந்தனா, தினேஷ் என்பவரை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், தினேஷூக்கு ரூ.5 லட்சம் வரை பணம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சந்தனாவை திருமணம் செய்து கொள்ள விரும்பாத தினேஷ் அவரது பணத்தின் மீதே குறியாக இருந்ததாகவும், இதையறிந்த சந்தனா, தன்னை திருமணம் செய்யாமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்த தினேஷால் மனமுடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தனா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தினேஷ் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க: பாத்ரூம் பாடகரா நீங்கள்... கொரோனா நிதி திரட்ட ஆன்ட்ரியா எடுத்திருக்கும் வித்தியாசமான முயற்சி
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading