2 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த டிவி நடிகர் கைது!

2 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த டிவி நடிகர் கைது!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: May 19, 2019, 12:46 PM IST
  • Share this:
கத்தி முனையில் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கன்னட டிவி நடிகர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள கோரமங்களா பகுதியில் இரண்டு பெண்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். கடந்த 12-ம் தேதி ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த பெண்கள், அதற்காக காத்திருந்தனர். இரவு சுமார் 8.20 மணியளவில் வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. உடனே தான் ஆர்டர் செய்த உணவு வந்துவிட்டது என நினைத்து கதவைத் திறந்தனர். அப்போது தான் அவர்கள் எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது.

கதவைத் திறந்த பெண்களை அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை போலீசில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.


அதிர்ச்சியடைந்த பெண்கள் இருவரும் தனது நண்பர்களிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல் துறையினரிடமும் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணையைத் துவங்கிய போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்ட கன்னட டிவி நடிகர் ராகேஷ், கார் டிரைவர் மணிகண்டா, பானி பூரி விற்கும் சூர்யா ஆகியோரை கைது செய்துள்ளனர்.

அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் இஷா பண்ட் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.வீடியோ பார்க்க: தல 60 அப்டேட்: 13 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அஜித் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி?

First published: May 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading