Home /News /entertainment /

சன் டிவி கண்மணி சீரியல் செளந்தர்யாவை ஞாபகம் இருக்கா? ரொம்ப நாளைக்கு அப்புறம் திரும்பவும் வர்றாங்க!

சன் டிவி கண்மணி சீரியல் செளந்தர்யாவை ஞாபகம் இருக்கா? ரொம்ப நாளைக்கு அப்புறம் திரும்பவும் வர்றாங்க!

கண்மணி சீரியல்

கண்மணி சீரியல்

கண்மனி சீரியலுக்கு பிறகு அவரை வேற எந்த சீரியலிலும் பார்க்க முடியவில்லை. இன்ஸ்டாவில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிடுவார்.

    சன் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் ஹிட் சீரியலான கண்மணி சீரியல் ஹீரோயின் செளந்தர்யா மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் அம்மன் சீரியல் 3ம் பாகத்தில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தொலைக்காட்சி சீரியல் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகம் வருவது சன் டிவி சேனல் தான். இந்த சேனலில் ஒளிப்பரப்பான சீரியல்களை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தாய்மார்களிடையே அதிக வரவேற்பை பெறும் வெற்றி நெடுந்தொடர்களாக இருக்கிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு முன்பு சன் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட சூப்பர்  ஹிட் சீரியல் தான் கண்மணி. பிக் பாஸ் புகழ் சஞ்சீவ் இதில் லீட் ரோலில் நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக செளந்தர்யா என்ற ரோலில் லீஷா எக்லர்ஸ் நடித்து இருந்தார்.

    இதையும் படிங்க.. சன் டிவி சுந்தரி சீரியலுக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை.. தாங்க முடியாத சந்தோஷத்தில் கேப்ரில்லா!

    இவர்களுடன் நடிகை பூர்ணிமா பாக்யராஜூம் நடித்து இருந்தார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பு பெற்று ஒளிப்பரப்பாகி வந்தது. அந்த நேரத்தில் கொரோனா அலை வீச, சின்னத்திரை முடங்கியது. அப்போது பல்வேறு காரணங்களால் சிரியல் பாதியில் முடிக்கப்பட்டது. ஆனாலும் இதில் செளந்தர்யாக நடித்த லீஷா எக்லர்ஸூக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய பெயர் கிடைத்தது.

    நடிகை லீஷா எக்லர்ஸ் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு இருந்தாலும் சென்னையில் தான் பிறந்தார்.2016-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பலே வெள்ளைய தேவா’ என்ற படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கியினார். இந்தப் படத்தில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் லீசா. அதனைத் தொடர்ந்து இவர் பொது நலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா, பிரியமுடன் பிரியா, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற பல படங்களில் நடித்தார்.

    இப்படி திரைப்படங்களில் இவ்வளவு படம் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை என்ற சோகம் ஒரு பக்கம் இருந்தாலும், சின்னத்திரையில் ஒளிபரப்பான ஒரே தொடரில் ஹிட் ஆகிவிட்டார். ஆனால் கண்மனி சீரியலுக்கு பிறகு அவரை வேற எந்த சீரியலிலும் பார்க்க முடியவில்லை. இன்ஸ்டாவில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிடுவார்.

    இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லீஷா எக்லர்ஸ் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் அம்மன் சீரியல் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த அம்மன் நெடுந்தொடரின் 3ம் அத்தியாயத்தில் லீஷா எக்லர்ஸ் நடிக்க இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன. அம்மன் 3 சீரியல் நாளை முதல் கலர்ஸ் தமிழில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)








    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி