சீரியல் நடிகர் நவீன், தனது வருங்கால மனைவியான நியூஸ் ரீடர் கண்மணி சேகரின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கலர்ஸ் தமிழ் சேனலில் 'இதயத்தை திருடாதே' தொடரில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நவீன். இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவரது சிறப்பான நடிப்புக்காகவே இவர் மிகவும் பிரபலமானார். இவருக்கு சமூக வலைத்தளங்களிலும் பல ஃபாலோவர்ஸ் உள்ளனர். இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நவீன் தனது இன்ஸ்டாவில் திருமணம் குறித்து அறிவித்தார். அதாவது சன் டிவி நியூஸ் ரீடர் கண்மணி சேகரை கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
மீண்டும் சன் டிவியில் சீரியலை இயக்க போகும் ’மெட்டி ஒலி’ கோபி!
இந்த அறிவிப்பை அறிந்த சின்னத்திரையினர் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் .அதே போன்று ரசிகர்களும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர். நவீனின் இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. இவர், இதயத்தை திருடாதே சீரியலில் ஜோடியாக நடிக்கும் ஹீமா பிந்துவை காதலிப்பதாக இணையத்தில் வந்ததிகள் பரவின. ஆன் ஸ்கீரினில் ஹிட்டடித்த இந்த ஜோடி நிஜத்தில் இணைந்தால் நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தங்களது விருப்பத்தை கூறி இருந்தனர். ஆனால் கடைசியில் வெளிவந்த அறிவிப்பு சற்று சர்ப்பிரைஸாக மாறியது.
கோபியிடம் ருத்ரதாண்டவம் ஆடும் ராதிகா! பாக்கியலட்சுமியில் உச்சக்கட்ட பரபரப்பு
அதனைத்தொடர்ந்து இந்த ஜோடிக்கு பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இந்த மாதம் நவீன் - கண்மணி திருமணமும் நடைப்பெறவுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கண்மணி தனது பிறந்த நாளை கொண்டாடினார். வருங்கால மனைவியான கண்மணியின் பிறந்த நாளன்று அவருக்கு பல சர்ப்பிரைஸ்களை கொடுத்து தனது காதலை நவீன் வெளிப்படுத்தி இருக்கிறார்.
கேக் கட்டிங், அவுட்டிங் என கண்மணியின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து உள்ளனர். இதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.