Home /News /entertainment /

பாரதி கண்ணம்மாவால் நிறைய இழந்தேன் - அஞ்சலி உருக்கம்

பாரதி கண்ணம்மாவால் நிறைய இழந்தேன் - அஞ்சலி உருக்கம்

கண்மணி மனோகரன்

கண்மணி மனோகரன்

"பாரதி கண்ணம்மாவின் 'அஞ்சலி' கேரக்டர்-ஐ நான் எப்போதுமே மிஸ் பண்ணுவேன். 'அஞ்சலி' என்னுடைய முதல் கதாபாத்திரம் ஆகும்.

  பிரபல விஜய் டிவி சீரியலில் ஒன்றான பாரதி கண்ணம்மாவின் முக்கிய கதாபாத்திரமான ரோஷினி ஹரிப்ரியனை மாற்றி விட்டு அவருக்கு பதிலாக, கண்ணம்மாவாக வினுஷா தேவியை நடிக்க வைப்பதையே ரசிகர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், அதே சீரியலின் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி மனோகரனும் சீரியலை விட்டு வெளியேறி உள்ளார். இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

  ஆரம்பத்தில் கண்ணம்மாவிற்கு எதிராக செயல்பட்ட அஞ்சலி என்கிற கதாபாத்திரம், கண்ணம்மா மீதான புரிதல் காரணமாகவும், மற்றொரு கதாபாத்திரமான அகிலன் இடையேயான கெமிஸ்ட்ரியின் காரணமாகவும் மெயின் கேரக்டர் ஆன கண்ணம்மாவிற்கு நிகராக ஒரு காதாபாத்திரமானார் கண்மணி. இதற்கிடையில் தான், இனி பாரதி கண்ணம்மாவில் அஞ்சலியாக நடிக்க போவதில்லை என்று அறிவித்து பல ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் கண்மணி.

  இதுதொடர்பாக கண்மணி மனோகரன் அளித்த பேட்டி ஒன்றில், அவர் பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். "பாரதி கண்ணம்மாவின் 'அஞ்சலி' கேரக்டர்-ஐ நான் எப்போதுமே மிஸ் பண்ணுவேன். 'அஞ்சலி' என்னுடைய முதல் கதாபாத்திரம் ஆகும். இந்த கேரக்டர் வழியாகத்தான் நான் பரிச்சயமான நடிகை ஆனேன். இந்த வேடத்தில் நடிக்க ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிறது. இந்த அஞ்சலி கேரக்டருக்காக நான் நிறைய வாய்ப்புகளை இழந்து உள்ளேன். ஏனெனில் என்னால் ஒரே நேரத்தில் பல ப்ராஜெக்ட்களில் வேலை செய்ய முடியாது. 'ஒரு நேரத்தில் ஒன்றை எடுத்து' எனது 100 சதவீதத்தை கொடுப்பது தான் என்னுடைய வொர்கிங் ஸ்டைல். ஆகவே ஒரு நடிகையாக நான் என்னை நிரூபிக்க நீண்ட காலம் காத்திருந்தேன். அஞ்சலியாக மூன்று வருடங்கள் கடந்தவுடன், அடுத்த கட்டஙக்ளுக்கு செல்ல முடிவு செய்தேன். எனவே தான் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு வெளியேறுகிறேன்" என்று கண்மணி கூறி உள்ளார்.

  அடுத்தகட்டமாக நடிகை கண்மணி ஜீ தமிழ் டிவியின் புதிய நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். அந்த நாடகத்தின் பாதி தலைப்பு மட்டுமே வெளியாகி உள்ளது, அது ‘அமுதாவும் _____’ என்பதே ஆகும். குறிப்பிட்ட ஜீ தமிழ் சீரியலின் டீஸர் வீடியோ வழியாக, கண்மணி இந்த நாடகத்தில் 'அமுதா 'என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

  ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

  தாயின் மறைவால் தன் படிப்பை நிறுத்தியதால் கல்விக்காக ஏங்கும் அமுதா என்கிற ஒரு கதாபாத்திரம், தனது படிப்பைத் தொடரவும் தனது கனவுகளை அடையவும் ஒரு ஆசிரியரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள், அப்படியான 'அமுதா' என்கிற வேடத்தில் தான் கண்மணி நடிக்கிறார்.

  அஜித் படத்தை ஒதுக்கும் முன்னணி தொலைக்காட்சி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

  அமுதா கேரக்டர் பற்றி கண்மணி கூறுகையில், நான் பல கதைகளை கேட்டேன், அதில் வரும் கதாநாயகி பெரும்பாலும் அழுது புலம்பும் ஒரு கதாபாத்திரமாகவே இருக்கிறாள். ஆனால் ‘அமுதா’ அப்படி அல்ல. இதில் நான் தேடும் அனைத்து உணர்ச்சிகளும் இருந்தன: சென்டிமென்ட், காதல் மட்டுமின்றி வேடிக்கையான பக்கங்களும் உள்ளன. இந்த சமநிலையான கலவை தான் அமுதா கதாபாத்திரத்தை நான் தேர்வு செய்ய காரணம்.

  வலிமை படத்தைப் பார்த்த பெற்றோர்... மனம் நெகிழ்ந்த அஜித்!

  நடிகை கண்மணி, வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்த்து வைக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார். "விரைவில் அது சார்ந்த அதிகாரப்பூர்வமான தகவலை அறிவிப்பேன்" என்றும் கண்மணி கூறி உள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Bharathi Kannama, Vijay tv

  அடுத்த செய்தி