முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கண்ட நாள் முதல் சீரியலில் அடுத்த சுவாரசியம்... குமரனுக்கு உதவ வரும் ஐ.ஜி ரவி!

கண்ட நாள் முதல் சீரியலில் அடுத்த சுவாரசியம்... குமரனுக்கு உதவ வரும் ஐ.ஜி ரவி!

கண்ட நாள் முதல்

கண்ட நாள் முதல்

சீரியலில் என்ட்ரி கொடு்க்கிறார் நடிகர் அஜய் ரத்தினம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கண்ட நாள் முதல் தொடரில் என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் அஜய் ரத்தினம்.

வித்யாசமான கதையம்சம் கொண்ட சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் கண்ட நாள் முதல். தர்ஷனா, நவின், அருண், ரஷ்மிதா ரோஜா உள்பட பலர் இந்த தொடரில் நடிக்கிறார்கள்.விதியின் திருப்பத்தால், குமரன் நந்தினியை திருமணம் செய்து கொள்கிறான். இந்தநிலையில் குமரனுக்கும் நந்தினிக்கும் இடையே காதல் மலர்கிறதா அல்லது அவர்கள் ஒருவரையொருவர் விட்டு பிரிகிறார்களா? என்பது தான் சீரியலின் ஒன்லைன்.

என் விலகலுக்கு இதுதான் காரணம்.. ராஜா ராணி 2 அர்ச்சனா கொடுத்த விளக்கம்!

இதயத்தை திருடாதே சீரியலைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக கலர்ஸ் தமிழ் உடன் இணைந்து நடிகர் நவீன் இந்த சீரியலில் குமரன் ரோலில் நடித்து வருகிறார் இவருக்கு ஜோடியாக நீதானே என் பொன்வசந்தம் அனு, நந்தினி ரோலில் நடிக்கிறார். கதைப்படி இப்போது நந்தினி அமெரிக்கா செல்வதற்கு குமரன் முழு உதவியும் செய்து வருகிறார். அதே போல் அக்கா - மாமா இருவருக்கும் இதனால் எந்த பிரச்சனையும் வந்து விட கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார் குமரன்.

சின்னத்திரையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி சோபியா என்ட்ரி!

இந்நிலையில் கான்ஸ்டபிளாக  இருக்கும் குமரனை ஐபிஎஸ் அதிகாரியாக மாற்ற அவருக்கு தேவையான ட்ரெயினிங் தர மெண்டாராக என்ட்ரி கொடு்க்கிறார் நடிகர் அஜய் ரத்தினம். சின்னத்திரை , வெள்ளித்திரை இரண்டிலுமே எப்போதுமே போலீஸ் கதாபாத்திரங்களை ஏற்றும் நடிக்கும் அஜய், இந்த தொடரிலும் ஐ.ஜி ரவியாக நடிக்கிறார். ஆனந்தம், கோலங்கள் என பல சீரியல்களில் அஜய் நடித்துள்ளார். குறிப்பாக ராதிகா சீரியலில் இவருக்கு நிச்சயம் இடம் உண்டு.

kanda naal mudhal serial actor Ajay Rathinam plays as Ravi help to kumaran kanda naal mudhal colors tamil
நடிகர் அஜய் ரத்தினம்.

இந்நிலையில் கண்ட நாள் முதல் தொடரில் நந்தினி மற்றும் குமரனை ரவி, சந்தித்து பேசுகிறார். குமரன் அடுத்தக்கட்டத்திற்கு போக கைக்கொடுப்பதாக கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial