ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கண்ட நாள் முதல் தொடரில் ஆரம்பமாகும் லவ் ட்ராக்.. குமரன் காதலை உணரும் நந்தினி!

கண்ட நாள் முதல் தொடரில் ஆரம்பமாகும் லவ் ட்ராக்.. குமரன் காதலை உணரும் நந்தினி!

கண்ட நாள் முதல்

கண்ட நாள் முதல்

அமெரிக்கா சென்ற பின்பு குமரனை மிஸ் செய்கிறார் நந்தினி.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கண்ட நாள் முதல் தொடரில் முதன் முதலாக குமரன் மீது இருக்கும் காதலை உணர்கிறார் நந்தினி. வரும் நாட்களில் நந்தினி - குமரன் லவ் ட்ராக் காட்சிகள் சீரியலில் ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது.

  இதயத்தை திருடாதே சீரியலைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக கலர்ஸ் தமிழ் உடன் இணைந்து நடிகர் நவீன்

  நடித்து வரும் தொடர் இதயத்தை திருடாதே. இந்த சீரியலில் குமரன் ரோலில் நவீன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நீதானே என் பொன்வசந்தம் அனு, நந்தினி ரோலில் நடிக்கிறார். கதைப்படி அக்காவுக்காக நந்தினியை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துக் கொள்கிறார் குமரன். நந்தினிக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. ஆனால் வேற வழியில்லாமல் அவரும் ஓகே சொல்ல நந்தினி - குமரன் கல்யாணம் நடந்து முடிகிறது.

  ''பிரைவேட் பார்ட்டுக்கு மார்க் போடச் சொன்னார்'' - பிக்பாஸ் பங்கேற்பாளர் குறித்து நடிகை பரபர புகார்!

  ஆனால் இருவரும் சேர்ந்து வாழவில்லை. இந்த உண்மை குமரனின் அக்காவுக்கு தெரிந்து விட்டது. அதே சமயம் நந்தினி அமெரிக்கா செல்வதற்கு குமரன் முழு உதவியும் செய்து வருகிறார். அக்கா - மாமா இருவருக்கும் இதனால் எந்த பிரச்சனையும் வந்து விட கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார் குமரன்.கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் இப்போது அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரவுள்ளது.

  நேத்து ராத்திரி எம்மா.. ஜிபி முத்து டான்ஸூக்கு அமுதவாணன் இப்படி சொல்லிட்டாரே!

  அதாவது வரும் நாட்களில் சீரியல் லவ் ட்ராக்கில் பயணிக்கவுள்ளது. நந்தினி விருப்பப்படி அமெரிக்கா சென்று விட, அவரை பத்திரமாக அனுப்பி வைக்கிறார் குமரன். ஆனால் கடைசியில் அமெரிக்கா சென்ற பின்பு குமரனை மிஸ் செய்கிறார் நந்தினி. அதுமட்டுமில்லை குமரன் மீது இருக்கும் காதலையும் நந்தினி உணர்கிறார். கண்டிப்பாக இந்த ட்ராக் இளைஞர்களை பெரிதும் கவரும் என்பதில் சீரியல் குழு நம்பிக்கையாக உள்ளது. அடுத்த வாரம் முதல் கண்ட நாள் தொடரில் குமரன் - நந்தினி லவ் ட்ராக்கை பார்க்க தயாராகுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial