ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கனா காணும் காலங்கள்: ஆசைக்காட்டி கடைசியில் ரசிகர்களை ஏமாற்றிய விஜய் டிவி!

கனா காணும் காலங்கள்: ஆசைக்காட்டி கடைசியில் ரசிகர்களை ஏமாற்றிய விஜய் டிவி!

கனா காணும் காலங்கள் சீரியல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பபடாமல் அதன் அதிகாரப்பூர்வ OTT பிளாட்ஃபார்மான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டுமே டெலிகாஸ்ட் செய்யப்படும்

கனா காணும் காலங்கள் சீரியல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பபடாமல் அதன் அதிகாரப்பூர்வ OTT பிளாட்ஃபார்மான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டுமே டெலிகாஸ்ட் செய்யப்படும்

கனா காணும் காலங்கள் சீரியல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பபடாமல் அதன் அதிகாரப்பூர்வ OTT பிளாட்ஃபார்மான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டுமே டெலிகாஸ்ட் செய்யப்படும்

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  சின்னத்திரை ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத பல சீரியல்களை ஒளிபரப்புவதில் பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வருகிறது ஸ்டார் விஜய் டிவி. வகை வகையாக ரியாலிட்டி ஷோக்களை டெலிகாஸ்ட் செய்து மக்களை ஒருபக்கம் கவர்ந்தாலும், மறுபக்கம் சீரியல் ரசிகர்களை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை விஜய் டிவி. விஜய் டிவியின் சீரியல் வரலாற்றில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று "கனா காணும் காலங்கள்". இது ஒளிபரப்பாகும் வரை சீரியல்கள் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கானது என்ற பிம்பமே இருந்து வந்தது.

  ஆனால் பள்ளி மாணவர்கள் மற்றும் இளவயதினரை பெரிதும் கவர்ந்து மெகாஹிட் லிஸ்ட்டில் சேர்ந்தது கனா காணும் காலங்கள். இந்த சீரியலில் நடித்த பல கதாபாத்திரங்கள் பார்வையாளர்களை குறிப்பாக இளைஞர்களை ஈர்க்க முடிந்தது. இன்றுவரை இந்த சீரியல் தமிழ் மக்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. . நீண்ட இடைவேளைக்கு பிறகு, கனா காணும் காலங்கள் மீண்டும் பார்வையாளர்களை மகிழ்விக்க வருகிறது. ஆம் விரைவில் கனா காணும் காலங்கள் சீசன் 2 டெலிகாஸ்ட் செய்யப்பட உள்ளது. இந்த முறை முற்றிலும் புதிய நட்சத்திர நடிகர்கள் மற்றும் குழுவுடன். கனா காணும் காலங்களின் புத்தம் புதிய சீசன் ஒளிப்பரப்பாக உள்ளது.

  இதையும் படிங்க.. பிக் பாஸிலிருந்து வெளியே வந்த உடனே சஞ்சீவ் யாரை சந்தித்தார் தெரியுமா?

  இது தொடர்பான ப்ரமோ வீடியோவை விஜய் டெலிவிஷன் தனது அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து இருக்கிறது. பிரபல யூடியூபர் ராஜ்மோகன் உள்ளிட்ட பல யூடியூபர்கள் இந்த சீசனில் நடித்திருப்பதை அந்த ப்ரமோ வீடியோவில் பார்க்க முடிகிறது. கனா காணும் காலங்களுக்கே உரிய துள்ளல் இசையுடன் இந்த புத்தம் புதிய சீசனின் ப்ரமோ வெளியாகி இருக்கிறது. ராஜ்மோகன் இதில் ஆசிரியராக நடிப்பது போல காட்டப்பட்டு உள்ளது. இவரை தவிர பல யூடியூப் சேனல் ஷோக்களில் நடிப்பவர்களுக்கு இந்த புதிய சீசனில் மாணவர்கள் கெட்டப்பில் காணப்படுகிறார்கள்.

  ' isDesktop="true" id="656833" youtubeid="iN_EPsBBhpo" category="television">

  இந்த புத்தம் புதிய கனா காணும் காலங்கள் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாக உள்ளதாக ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் குஷியாக இருந்தார்கள். ஆனால் கனா காணும் காலங்கள் சீசன் 2-வின் ப்ரமோ வீடியோவின் இறுதியில் Only on Disney Hotstar என்று குறிப்பிடப்படுவதை கண்டு ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில் இந்த புத்தம் புதிய கனா காணும் காலங்கள் சீசன் 2-ஆனது ஸ்டார் விஜய் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான, பிரபலமான ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கான பிரத்யேக நிகழ்ச்சியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க.. அடுத்த பட டைட்டிலை அறிவித்தார் விஷால்... தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பெயர்

  அதாவது இந்த சீரியல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பபடாமல் அதன் அதிகாரப்பூர்வ OTT பிளாட்ஃபார்மான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டுமே டெலிகாஸ்ட் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv