சீரியலுக்கு நோ.. டாக்டர்.. ஸ்வீட் மனைவி! கனா காணும் காலங்கள் புகழ் ’மோனிஷா’ ரீவைண்ட்!

கனா காணும் காலங்கள் மோனிஷா

மோனிஷா இப்போது டாக்டர். திருமணம் செய்துக்கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்

 • Share this:
  விஜய் டிவியில் 13 வருடங்களுக்கு முன்பு வெளியான பள்ளிக்காலத் தொடர் தான் கனா காணும் காலங்கள். 90ஸ் கிட்ஸ்கள் இந்த சீரியலை வெறித்தனமாக பார்த்த காலமும் உண்டு.

  இந்த தொடரில் வரும் ஜோ, ராகவி, சங்கவி, பாண்டி, உன்னி, ரிஷி போன்றவர்களின் கதாபாத்திரங்கள் நம் வீட்டு பிள்ளைகளின் பிரதிபலிப்பு தான். இந்த தொடரில் நடித்ததன் மூலம் புகழின் உச்சியை அடைந்த நடிகர்களும் உண்டு. பிளாக் பாண்டி இந்த சீரியலுக்கு பின்பு ’அங்காடி தெரு ’படத்தில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ராகவி ரோலில் நடித்த குழந்தை நட்சத்திரம் தீபா ’தென்றல்’ சீரியலில் ஹீரோயினுக்கு அடுத்தப்படியான கதாபாத்திரத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். இம்ஃப்ரான் வெள்ளித்திரையில் 3 படங்களுக்கு மேல் நடித்தார்.

  இதேப்போல் ஏகப்பட்ட நடிகர்கள் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு இந்த சீரியல் சின்னத்திரையில் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. ஸ்கூல், லேப். ஆசிரியர்கள், பீட்டி சார் என இந்த தொடரில் வரும் அனைத்தும் இன்று வரை ரசிகர்கள் மனதில் அழியாமல் நிலைத்து நிற்கிறது. ஏதோ ஒரு தாக்கத்தை மனதில் விதைத்துவிட்ட சென்ற சீரியல் என்றே சொல்லலாம். இந்த சீரியலின் அடுத்தடுத்த சீசன்கள் ஒளிப்பரப்பானாலும் கூட முதல் தொடர் (ஃபர்ஸ்ட் சீசன்) அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது.

  இந்த சீரியலின் மிகப்பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் சங்கவி இறந்தது தான். ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவரின் ரோல் இறப்பில் முடித்து வைக்கப்பட்டது. அதற்கு காரணம் அப்போது அவருக்கு மருத்துவ படிப்பிற்கான சீட் கிடைத்து அவர் ஹாஸ்டலில் தங்கி படிக்க கிளம்பியது தான். அதனால் இயக்குனர் , சங்கவி கதாபாத்திரத்தை முடித்து வைத்தார். சங்கவியாக நடித்த மோனிஷாவுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்கள் உண்டு. அந்த டைம் இந்த அளவிற்கு சோஷியல் மீடியா புழக்கம் இல்லை, இருந்திருந்தால் போஸ்ட் போட்டே புலம்பி தள்ளி இருப்பார்கள் ரசிகர்கள்.

  கணவருடன் மோனிஷா


   

  சீரியலுக்கு குட் பாய் சொல்லிவிட்டு மருத்துவம் படிக்க சென்ற மோனிஷா இப்போது டாக்டர். திருமணம் செய்துக்கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அன்மையில் நடந்த கனா காணும் காலங்கள் ரீவைண்ட் ஷோவில் கூட அவர் கலந்துக்கொள்ளவில்லை. இதற்கான காரணத்தையும் அவர் பிரபல யூடியூப் சேனல் நடத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

  பெற்றோர்களை பெருமைப்படுத்தி டாக்டர் கனவை அடைந்து, இப்போது அன்பான குடும்பம், அமைதியான வெளிநாட்டு வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருக்கிறார் சங்கவி என அழைக்கப்படும் மோனிஷா.
  Published by:Sreeja Sreeja
  First published: