90ஸ் கிட்ஸ்கள் வெறித்தனமாக பார்த்த சீரியல்களில் கனா காணும் காலங்கள் சீரியலும் ஒன்று. 13 வருடங்களுக்கு முன்பு வெளியான பள்ளிக்காலத் தொடர் தான் கனா காணும் காலங்கள். இந்த தொடரில் தோன்றிய ஜோ, ராகவி, சங்கவி, பாண்டி, உன்னி, ரிஷி போன்றவர்களின் கதாபாத்திரங்களை இன்று வரை மறக்க முடியாது. இந்த தொடரில் நடித்ததன் மூலம் புகழின் உச்சியை அடைந்த நடிகர்களும் உண்டு. பிளாக் பாண்டி இந்த சீரியலுக்கு பின்பு ’அங்காடி தெரு ’படத்தில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ராகவி ரோலில் நடித்த குழந்தை நட்சத்திரம் தீபா ’தென்றல்’ சீரியலில் ஹீரோயினுக்கு அடுத்தப்படியான கதாபாத்திரத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். இம்ஃப்ரான் வெள்ளித்திரையில் 3 படங்களுக்கு மேல் நடித்தார்.
இதேப்போல் ஏகப்பட்ட நடிகர்கள் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு இந்த சீரியல் சின்னத்திரையில் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. ஸ்கூல், லேப். ஆசிரியர்கள், பீட்டி சார் என இந்த தொடரில் வரும் அனைத்தும் இன்று வரை ரசிகர்கள் மனதில் அழியாமல் நிலைத்து நிற்கிறது. ஏதோ ஒரு தாக்கத்தை மனதில் விதைத்துவிட்ட சென்ற சீரியல் என்றே சொல்லலாம். இந்த சீரியலின் அடுத்தடுத்த சீசன்கள் ஒளிப்பரப்பானாலும் கூட முதல் தொடர் (ஃபர்ஸ்ட் சீசன்) அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது.
தளபதி 66 -ல் இணைந்த பிரபல தமிழ் நடிகர்… அடுத்த லெவலுக்கு செல்லும் எதிர்பார்ப்பு
கனா காணும் காலங்கள் சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, கனா காணும் காலங்கள் பருவம் 2, கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என மொத்தம் 4 சீசன்கள் ஒளிபரப்பாகின. கனா காணும் காலங்கள் சீரியலின் 4 சீசன்களுமே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. இந்நிலையில் தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் ‘கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸ் வடிவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிப்பரப்பாகி வருகிறது. தீபிகா வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த் செய்ஜு, தேஜா வெங்கடேஷ் ஆகிய புதுமுக நடிகர்கள் மாணவர்களாக நடிக்க, நடிகர் ராஜேஷ் பள்ளி நிறுவனர் சக்திவேலாக நடிக்கிறார். ராஜ்மோகன் பிடி மாஸ்டராக நடித்துள்ளார்.
AK61: அஜித்தின் AK61 படத்தில் மஞ்சு வாரியர்!
இந்த சீரியலில் தற்போது கனா காணும் காலங்கள் முதல் பாகத்தில் வினித் ரோலில் நடித்த இம்ஃப்ரான் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். ஜெர்ரி என்ற ரோலில் அவரின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் உள்ளம் கவர்ந்த நாயகனாக வளம் வந்த இம்ஃப்ரானுக்கு இது சிறப்பான கம்பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.