• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • kamalhassan bigg boss : எல்லைக்கும் வரம்புக்கும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வித்தியாசம் தெரியாதா?

kamalhassan bigg boss : எல்லைக்கும் வரம்புக்கும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வித்தியாசம் தெரியாதா?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

அடுத்த வாரம் கண்டிப்பாக இசைவாணி வெளியேற்றப்படுவார் என பேச்சுக்கள் இப்போதே பரவ தொடங்கி விட்டன.

  • Share this:
    பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன், இன்று எல்லைக்கும் வரம்புக்கும் உள்ள வித்தியாசத்தை காட்ட போகிறார்.

    விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி தற்போது நான்கு வாரம் முடிய போகுது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர். சென்ற வாரம் ஸ்ருதியின் வெளியேற்றம் மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்து இருந்தது. இறுதி போட்டி வரை செல்லும் அளவுக்கு தகுதியான போட்டியாளராக இருந்த ஸ்ருதியின் வெளியேற்ற பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. சமூகவலைத்தளங்களிலும் அவருக்கு ஆதரவாக குரல்கள் ஒலித்தன.இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் விட்டில் பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டன. எல்லாமே ரசிக்கும்படியாக இருந்தன.

    செண்பகமே செண்பகமே, நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்குகள் சுவாரசியத்தை கூட்டின. அதுமட்டுமில்லை இந்த டாஸ்கில் பலரின் உண்மை முகங்களும் வெளியே தெரிந்தன. சிபிக்கும் அக்‌ஷராவுக்கும் இடையில் வெடித்த சண்டை, நிரூப்பின் கேம் பிளான், வருணின் ருத்ரதாண்டவம் என போட்டியாளர்களின் முகத்திரை கிழிந்து உண்மை முகங்கள் தெரிய தொடங்கி விட்டன. இந்த வாரம் வித்யாசமாக நடந்த தலைவர் டாஸ்கில் அபிநவ் வெற்றி பெற்றாலும் நாணய சக்தியை பயன்படுத்தி இசை வீட்டின் தலைவரானார்.

    அதனால் நாமினேஷன் லிஸ்டில் இசை பெயர் இல்லை. ஆனால் அடுத்த வாரம் கண்டிப்பாக இசைவாணி வெளியேற்றப்படுவார் என பேச்சுக்கள் இப்போதே பரவ தொடங்கி விட்டன. இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் எபிசோடு ஒளிப்பரப்பாகும். இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோ தற்போது வெளியாகியுள்ளது.



    இந்த புரமோவில் கமல்ஹாசன் செண்பகமே செண்பகமே மற்றும் நீயும் பொம்பை நானும் பொம்பை டாஸ்கில் நடைப்பெற்ற சண்டை காட்டிகளை திரையில் ஓட வைத்து, வரம்புக்கும், எல்லைக்கும் இடையே உள்ல வித்தியாசத்தை இவர்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்கிறார். வழக்கம் போல் ஆர்வத்தை தூண்டி இருக்கும் புரமோவால் ரசிகர்கள் இன்று இரவு நிகழ்ச்சியை பார்க்க ஆவலாக உள்ளனர். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சிபி, நிரூப், அக்‌ஷரா, இமான் அண்ணாச்சி, ராஜூ, வருண் ஆகியோர் உள்ளனர். இதில் யார் வெளியே செல்வார் ? என்பது நாளை தெரிந்து விடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: